24 special

அதிகரிக்கும் வெயிலின் தாக்கம் இப்படியும் குளிர்ந்த சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்குமா??

SUN, WATER
SUN, WATER

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இறுதி தேர்வுகள் வரும்பொழுது அதனுடன் சேர்ந்து கூடவே விடுமுறையும் வந்துவிடும் ஐயா ஜாலி கோடை விடுமுறை நீ ஸ்கூலுக்கு போக தேவை இல்லை ஒரு மாசம் ஹோம் ஒர்க் செய்ய தேவையில்ல நல்லா தூங்கலாம் டிவி பார்க்கலாம் ஆடலாம் என பல கனவில் இருப்பார்கள் ஆனால் அவர்களது கனவை மொத்தத்தையும் இந்த வெயில் நிறைவேற்றாமல் வீட்டிலேயே அவர்களை முடக்கி விடுகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடத்தில் கோடை வெயிலின் தாக்கம் ஆனது அதிகமாக இருப்பதையும் நம்மால் உணர முடிகிறது செய்திகளிலும் பார்க்க முடிகிறது. மேலும் அதிகமாக வெயில் அடித்தாலும் அவ்வப்போது சில தூரலை மேகம் கொடுக்கும். ஆனால் அது கூட தற்போது எங்கோ ஓரிரு இடங்களில் மட்டும் நடைபெறுகிறது. இதனால் மாலை ஐந்து மணிக்கு மேல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது விளையாட்டை தொடங்குகிறார்கள். 


வெயில் காலத்தில் நாம் இருக்கும் பகுதியில் தான் அதிக வெயில் இருக்கும் அதனால் குளிர்ந்த பகுதிகளுக்கு சென்று விடலாம் என்று பல வசதி படைத்தவர்கள் காஷ்மீர் போன்ற பிற மாநிலங்களுக்கு செல்வார்கள் ஆனால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்கள் தமிழகத்திற்கு உள்ளே இருக்கும் குளிர் பிரதேசங்களையே தேடிச் செல்வார்கள். அதுதான் நீலகிரி, கொடைக்கானல் ஊட்டி, ஏற்காடு போன்ற பகுதிகள். அங்கு சென்றால் நம்மால் வெயிலை கட்டுப்படுத்த முடியும் வெயிலின் தாக்கத்திலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று பலர் தற்போது குளிர் பிரதேசங்களை நோக்கி செல்கிறார்கள். ஆனால் அங்கும் இதுவரை இல்லாத வகையில் வெயிலானது சுட்டுரித்துக் கொண்டிருக்கிறது. மிகுந்த குளிர்ந்த காற்று வீசாதே என்று பார்த்தாலும் அதிக வெப்பம் அங்கு காணப்படாது என்று பல இப்பகுதிகளுக்கு செல்கிறார்கள் ஆனால் ஊட்டியில் கூட இதுவரை பதிவாகாத வகையில் வெளியானது சுட்டெரிக்கிறது!. நீர்நிலைகளில் இருக்கும் நீர்களும் காலப்போக்கில் குறைந்து கொண்டே வருவதால் பல பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் கோடை விடுமுறைக்கு நீலகிரி மற்றும் மற்ற சுற்றுலா தளங்களுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக விலை கொடுத்து தண்ணீரை வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். 

இதனால் இந்த கோடை விடுமுறை முழுக்க முழுக்க வீட்டிலிருந்து கழிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது, வேறு எந்த வகையில் எல்லாம் வெட்கையும் வெப்பத்தின் தாக்கத்தையும் தனித்து கொள்ளலாம் என்று பலர் குளிர்ந்த நீரை பழகி வருகிறார்கள் பழச்சாறுகளையும் குடித்து வருகிறார்கள் குளிர்ச்சியான உணவுப் பொருட்களை தேடிச் செல்கிறார்கள். முன்பெல்லாம் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பதை பழக்கமாகக் கொண்டனர் ஆனால் தற்போது குளிர்சாதன பெட்டியின் பயன்பாடானது அதிகரித்து இருப்பதால் அதில் தண்ணீரை ஊற்றி வைத்து பிறகு குளிர்ச்சியான நீரை பரவுகிறார்கள் ஆனால் அவற்றால் நம் உடல் குளிர்ச்சியாகமா என்று பார்த்தால் தெரியாது! இப்படி வெயில் தாக்கத்தை நினைக்கும் பொழுது நம் தலை சுற்றுகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தை சற்று குறைக்கவும் குளிர்ச்சியான நீரை பருகி உடல் நலத்தின் உஷ்ணத்தையும் குறைக்கவும் எளிதான ஒரு முறையை ஒரு குடும்பப் பெண் கூறியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைராக்கி வருகிறது. 

மண்பானையில், நீரை நிரப்பி வைத்து விட்டு அதில் ஒரு பருத்தி துணியில் பாதி கைப்பிடி அளவிலான வெட்டிவேரை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்,  தேற்றான் கொட்டையில் நான்கையும், சிறிதளவு சீரகத்தையும் அந்த பருத்தி துணியில் வைத்து பிறகு அதனை நன்கு முடிச்சு போட்டு மண் பானையில் உள்ள நீரில் போட்டு விட வேண்டும் இதுவே தண்ணீரை சுத்தப்படுத்தி குளிர்ச்சியானதாக மாற்றி விடும், மேலும் இதனுடன் ஒரு சிறு துண்டு எலுமிச்சை பழத்தையும் அதில் போட்டால் நிச்சயமாக நீரானது குளிர்ச்சியாகவும் உடலிற்கும் குளிர்ச்சி கொடுக்கும் என்று அவருக்கு கூறியுள்ளார். அதனால் இது போன்ற முறையை நீங்களும் முயற்சித்து வெயிலின் தாக்கத்தை உடலின் சூட்டையும் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்!