24 special

மூடப்பட்ட 55 ஸ்பாக்கள்!! என்ன காரணம்? வேம்பையரா இல்ல வேற காரணமா?

ISPA ISSUE
ISPA ISSUE

சமீப காலமாக ஆண்களும் பெண்களும் தனது அழகின் மீது அதிக அக்கறை காட்ட தொடங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது ஏன் நமது வீட்டில் உள்ள ஆண்களும் பெண்களும் தனது அழகின் மீது கவனம் செலுத்துவதையும் அதை பராமரிப்பதையும்  நாம் பார்த்துக் கொண்டுதான் இருப்போம்! அதிலும் குறிப்பாக முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே தயாரிக்கும் கடலை மாவையும் பச்சை பயிறு மாவையும் ஒரு பேஸ்ட் ஆக மாற்றி அதனை தனது முகத்தில் பூசி அழகு பெறுவார்கள் அல்லது பொலிவு பெறுவார்கள்! ஆனால் தற்போது பியூட்டி பார்லர் களுக்கு சென்று ஃபேஷியல் மெடிக்கூயர், பெடிகூயர் போன்ற பல முறைகளில் தன்னை அழகுப்படுத்தி வருகின்றனர் மேலும் பெண்கள் மட்டுமின்றி ஆண்களுக்கும் தற்போது பல அழகு சாதன பொருட்கள் அழகு நிலையங்கள் வந்துள்ளது அங்கும் பல ஆண்கள் சென்று தங்களது அழகை பராமரிப்பதோடு பாதுகாத்தும் வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ஸ்பாககளுக்குச் செல்லும் பழக்கமும் தற்போதைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது ,.


ஒரு முறை ஸ்பாவிற்கு சென்று வந்தால் தன் முழு உடலையும் அழகு படுத்தி விடலாம் என்ற ஒரு எண்ணத்தில் பலர் தற்போது செல்கிறார்கள் ஆனால் அங்கு சட்டவிரோதமாக பல நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. மேலும் சமீபத்தில் அட்வான்ஸ் சிகிச்சையாக கருதப்பட்டு இளைஞர்களிடையே அதிக வரவேற்பு பெற்று வந்த வேம்பையர் சிகிச்சையால் சிலருக்கு புற்றுநோய் ஏற்பட்ட சம்பவமும் செய்திகளில் வெளியாகிறது. அதாவது அமெரிக்காவில் இயங்கி வந்த ஒரு ஸ்பாவில் வேம்பையர் சிகிச்சை என்ற பெயரில் ஒரு பேமஸான அழகு பொலிவை கொடுக்கின்ற முறை செய்யப்பட்டு வந்தது இந்த முறையானது மேலை நாடுகளில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு முறையாகும் அதன்படி அங்கு சென்று வேம்பையர் சிகிச்சை எடுத்துக் கொண்டு சிலருக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியானது, அதனை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ தளங்களும் உறுதி செய்வது மேலும் அந்த ஸ்பாவில் வேம்பையர் சிகிச்சை எடுத்துக் கொண்ட அனைவரும் புற்றுநோய் குறித்த மருத்துவ சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் அமெரிக்க அரசு அறிவுறுத்தி இருந்தது.

இதனை அடுத்து அங்கு இயங்கி வந்த பல ஸ்பாக்கள் மீது கட்டுப்பாடுகள் அதிகமானது குறிப்பிடத்தக்கது. அதோடு இதுகுறித்து தமிழகத்திலும் பரவலாக பேசப்பட்டு வந்தது ஏனென்றால் தமிழகத்திலும் முக்கியமான நகரங்களான சென்னை மற்றும் கோவை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற வேம்பயர் சிகிச்சைகள் ஸ்ப்பாவில் செய்யப்பட்டு வந்ததாகவும் மருத்துவரின் அனுமதியும் மருத்துவரின் ஆலோசனையும் இன்றி இது போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ளக்கூடாது மேலும் இந்த சிகிச்சை முறையை ஒரு மருத்துவர் மட்டுமே செய்ய முடியும் அரைகுறையாக கற்றுக்கொண்டு ஒரு மேக்கப் ஆர்டிஸ்ட் செய்ய முடியாது செய்யவும் கூடாது என்று பல மருத்துவ நிபுணர்கள் கூறினார். இந்த நிலையில், சென்னையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 55 ஸ்பாக்களை போலீசார் மூடி உள்ளனர். அதாவது கோயம்பேடு, அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த ஸ்பாக்களை முடியுள்ளனர். எதற்காக மூடி இருக்கிறார்கள் ஒருவேளை சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வைரலான வேம்பையர் சிகிச்சையால் மூடுகிறார்களா என்ற வதந்திகளும் பேச்சுக்களும் உலா வந்த நிலையில் அந்த 55 ஸ்பாக்களும் சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் சில பெண்களை ஈடுபடுத்தி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது அதன் காரணமாகவே இந்த 55 ஸ்பாக்களையும் போலீசார் அதிரடியாக கண்டறிந்து மூடி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த செய்தி அப்பகுதியில் உள்ள அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.