24 special

டெல்லியிலிருந்து பறந்த அதிரடி உத்தரவு… திமுக டாப் தலைவர்கள்.. ப்ளூ பிரிண்ட் ரெடி... மொத்தமாக மாறும் நிலை..

CBI,MKSTALIN
CBI,MKSTALIN

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள்  தயாராகி வருகிறது. 


திமுக கூட்டணி வலுவாக இருப்பதாக  தோன்றினாலும்.. விஜயிடமும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பேசி வருகிறது. அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் கட்சி யின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையை  மாற்றவும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  திமுக அரசின் பெண்களுக்கு மாசம் ரூ1,000 கொடுக்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆட்சி முடிவடையும் நேரத்தில் 1 லட்சம் பெண்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தைதொடங்கி வைக்கும்  நிகழ்ச்சியில ராகுல் காந்தியை பங்கேற்க வைக்க சிஎம் ஸ்டாலின் அழைத்துள்ளார்.. ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. 

காங்கிரஸ் 234 தொகுதிக்கும் விருப்ப மனு வாங்க தொடங்கிஉள்ளது . ஆனாலும் டெல்லி மேலிடமோ, “திமுக கிட்ட சாப்ட் அப்ரோச்சில இருக்கும்  செல்வப்பெருந்தகை.. ஸ்டிராங்கா பேசி அதிகமாக சீட் வாங்குற மாதிரி தெரியவில்லை என்பதால் செல்வப்பெருந்தகைக்கு பதிலா வேறு ஒருத்தரை போட்டுவிட்டால்தான் சரியா வரும் எண்ண  தொடங்கிவிட்டது காங்கிரஸ் மேலிடம். 

விஜய் திமுக கூட்டணி ஓட்டுக்களை பிரித்தாலும் அதிமுக ஓட்டுக்களையும் பிரிக்க வாய்ப்புள்ளது.  காங்கிரஸ் திமுகவை விட்டு பிரிந்தாலும் பணபலத்தால் வலிமையாகவும் காவல்துறை திமுக அரசின் கீழ் இருப்பதால்  தேர்தல் நேரத்தில்  திமுகவுக்கு சாதகமாக காவல்துறை இருக்கும் இன்னமும் பொறுப்பு டிஜிபி தான் தமிழ்கத்தில் இருக்கிறார்  4 ஆண்டுகள் காவல்துறை  நடவடிக்கைகளும் ஆளும் அரசுக்கு ஆதரகவாக இருப்பதால்   வேறு நடவடிக்கையை எடுக்க வேண்டும் என டெல்லிக்கு ரிப்போர்ட் சென்றுள்ளது. எனவே திமுகவின்  பண பலத்தை குறைக்கமுதலில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லிக்கு ரிப்போர்ட் கொடுத்துள்ளது. 

இரு மாதங்களுக்கு  முன் பிரதமரிடம் கொடுக்கப்பட்ட  மற்றொரு ரிப்போர்ட்டில்  திமுகவில் உள்ள  முக்கிய தலைகளின் வழக்குகள் குறித்த தகவல்கள் உள்ளதாம். அப்போது  மோடி  பீகார் தேர்தல்  முடிந்து பார்த்து கொள்ளலாம் என கூறியுள்ளார் 

பீஹார் தேர்தல் முடிந்த நிலையில் திமுகவினர்  மீதான நடவடிக்கை தொடங்க அமித்ஷாவுக்கு கீரின் சிக்னல் கொடுத்துள்ளார் மோடி . இதனை தொடர்ந்து அமித்ஷா திமுக ஆப்ரேஷனை உடனே ஸ்டார் செய்யுங்கள் என  உத்தரவிட்டுள்ளாராம். அதன் முதல் விக்கெட் தான் கே,என் நேரு என்கிறார்கள். இத்தாலி வரை பிசினஸ் திருச்சியில் நாட்டமை என வலம் வந்த கே.என் நேருவை சுற்றியுள்ளது அமலாக்கத்துறை

அமித்ஷாவிடம் கொடுத்த பைலில் திமுகவின் முக்கிய முகங்களின் பினாமி நெட்வொர்க் பற்றி விரிவான பட்டியல்…யார் யார் பெயரில் எத்தனை ஏக்கர்? எத்தனை கோடி மதிப்புள்ள வீடுகள், நிலங்கள்?எந்தவர் எந்த உறவினர் பெயரில்?எந்த மாவட்டத்தில் எவ்வளவு முதலீடு?அதை விட கூட பெரிய விஷயம்…வரவிருக்கும் தேர்தலுக்காக எவ்வளவு பணம் ரெடியாகி இருக்கிறது, அந்த பணத்தை யாரிடம் கொடுத்து பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்பதையும் கொண்டிருந்ததாக டெல்லி வட்டாரங்கள் கூறுகிறது. 

நேருவை  தொடர்ந்து  கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாஜி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர்மீது பல்வேறு புகார்களும் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் பலர்மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை விசாரணையெல்லாம் நடந்திருக்கின்றன.  டாஸ்மாக், மணல் வியாபாரம் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையும்கூட இனி தொடங்க உள்ளது. ‘ராம்சர் நிலம்’ என்று வகைப்படுத்தப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையே கூறுபோட்டு கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்துவிட்டது தி.மு.க அரசு. அதை சி.பி.ஐ விசாரித்தால், தி.மு.க மேலிடத்துக்கே பெரிய அளவில் நெருக்கடி வரும்.என்கிறார்கள்.