24 special

அக்னி 4 ஏவுகணை பரிசோதனை வெற்றி..!


ஒடிசா : இந்தியா 2014க்கு பிறகு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தங்கி கப்பல்கள் ஏவுகணைகள் ராடார்கள் என பல மேம்படுத்தப்பட்ட நவீன பாதுகாப்பு ஆயுதங்களை வெற்றிகரமாக பரிசோதித்து வருகிறது. மேலும் அவை உலகத்தரத்தில் இருப்பதுடன் உற்பத்திசெலவும் குறைந்த அளவே ஆவதாக DRDO வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள APJ அப்துல் கலாம் தீவில் இருந்து அணுசக்தி திறன் நிறைந்த அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில் " இரவு 7.30 மணியளவில் சோதனை முயற்சி நடத்தப்பட்டது.

இந்த அக்னி 4 சோதனையானது நம்பகமான குறைந்தபட்ச தடுப்புத்திறனை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. ஒடிஸாவின் APJ அப்துல் கலாம் தீவில் இருந்து ஜூன் 6 அன்று அக்னி 4 எனும் இடைநிலை தடுப்பு ஏவுகணையின்  ஏவுதல் பயிற்சி வெற்றிகரமாக 1930 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்டது. இந்த வெற்றிகரமான சோதனையானது,


மூலோபாய படைகளின் கட்டளையின் கீழ் நடத்தப்பட்ட வழக்கமான பயிற்சிகளில் ஒன்று. இது ஒரு பயனர் பயிற்சியின் துவக்கங்களின் ஒரு பகுதியாகும்" என அந்த அறிக்கையில் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த அக்னி 4 அணுஆயுதங்களை சுமந்து செல்வதுடன் ஏவுகணைகளை வழிமறித்து தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.