24 special

அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அண்ணாமலை !

Annamalai
Annamalai

அண்ணாமலையின் மாநில சுற்று பயணத்தில் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை  ஆளும் கட்சியான திமுக மற்றும் இதர தமிழகத்தை சேர்ந்த கட்சிகளுக்கும் கொடுத்துள்ளது, இது வரை பத்திரிகையாளர்களை வைத்து அண்ணாமலை அரசியல் செய்வதாக பேசியவர்கள், என்ன இப்படி ஆகிவிட்டது என அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.


முன்னாள் IPS அதிகாரியான அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடிகளை செய்து வருகிறார், முதலில்  குறுக்கு மறுக்காக கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை அண்ணா நீங்க சன் டிவியா, கோபாலபுரமா என கேள்வி எழுப்பி ஆப் செய்தார் அண்ணாமலை, அதையும் மீறி சிலர் வம்படியாக அண்ணாமலையிடம் கேள்வி கேட்க கிடைத்த பதிலால் ஆடி போய்விட்டனர்.

திமுக அமைச்சர்களை அண்ணாமலை டீல் செய்த விதமும் எங்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுத்தால் மத்தியில் ஆட்சியில் உள்ள நாங்கள் என்ன கையை கட்டி கொண்டு வேடிக்கையா பார்ப்போம் என நேரடியாக உடைத்து பேசினார் அண்ணாமலை, இப்படி நாளுக்கு நாள் அண்ணாமலை கொடுக்கும் பேட்டிகள் சமூக வலைத்தளத்தில் பெரும் பங்கு வகிக்க

ஒரு கட்டத்தில் அண்ணாமலையை வளர்ப்பதே இந்த பத்திரிகையாளர்கள் தான் அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்யவில்லை என்றால், எந்த மாற்றமும் உண்டாக போவதில்லை என சிலர் கூறிவந்த நிலையில், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை செய்து அடுத்தகட்ட கியரை சேன்ஞ் செய்தார் அண்ணாமலை.

நேரடியாக மாநிலம் முழுவதும் பிரதமர் மோடி அரசின் 8 ஆண்டு சாதனை குறித்து விளக்கம் கொடுக்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யவும் அதில் பல்வேறு விவகாரங்களை பேசவும் திட்டமிட்டனர்,அங்குதான் திமுக தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்து இருக்கிறது, அண்ணாமலை பேட்டி சமூகவலைத்தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாமே தவிர, களத்தில் எதிரொலிக்காது என கணக்கு போட்டு இருந்தனராம் ஆளும் கட்சி.

ஆனால் அண்ணாமலை சென்ற இடங்களில் எல்லாம் கூட்டம் அலை மோதுகிறது, முன்பெல்லாம் பாஜகவின் தேசிய தலைவர்கள், பிரதமர் போன்றோர் வருகையின் போது மட்டுமே கூட்டத்தை கூட்டி அழைத்து வர நிர்வாகிகள் வேலை செய்வார்கள், ஆனால் மாநிலம் முழுவதும் பொருளாதார ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும் வலுவான தலைவர்களை மாவட்ட, மாநில நிர்வாகிகளாக பாஜக தலைமை அறிவித்துள்ள காரணத்தால் அனைவரும் தீவிரமாக களத்தில் இறங்கி வேலை செய்கிறார்களாம்.

இதற்கு அண்ணாமலை தலைமையில் திருநெல்வேலியில் நடைபெற்ற பொது கூட்டம் நிகழ்வே சாட்சியாக அமைந்து இருக்கிறது, ஆட்சியில் இல்லாத நிலையில் முதல்வர் ஸ்டாலினிக்கு கூட இது போன்ற ஒரு கூட்டம் கூடினால் ஆச்சர்யம் என்கின்றனர் அரசியலில் நீண்ட அனுபவம் உள்ளவர்கள்.

ஒரு கட்சி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்றால் தலைவர்கள் மற்றும் அடிமட்ட அளவில் உள்ள நிர்வாகிகளும் வேலை செய்தால் மட்டுமே அந்த கட்சி முதலில் எதிர்க்கட்சி அளவை அடைய முடியும், அந்த வகையில் தமிழகத்தில் பாஜக மிகவும் துடிப்புடன் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் வேலை செய்து வருவதால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 10 இடங்களை கைப்பற்றினாலும் ஆச்சர்யம் இல்லை என நம்பிக்கை கொடுக்கின்றனர் மேல் மட்ட பாஜக நிர்வாகிகள்.

மொத்தத்தில் பாஜகவின் ஒவ்வொரு பொது கூட்டம் நிகழ்வும் அதில் அண்ணாமலை தெரிவிக்கும் கருத்தும், பொது கூட்டத்தில் கூடும் மக்கள் கூட்டமும் திராவிட கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அடுத்த பதிவில் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஏன் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்ற அதிமுக மற்றும் பாமக இரண்டு கட்சிகளும் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்ய காரணம் என்ன? ஏன் ஒரே நேரத்தில் இந்த அட்டாக் என்ற பல பின்னணி தகவல்களை ஆராய்ந்து கொடுக்க இருக்கிறோம் மறக்காமல் TNNEWS24 DIGITAL பக்கத்தை follow செய்து கொள்ளவும்.