தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இருவரும் இணைந்து செய்த அதிரடி சம்பவம் இப்போது தமிழகத்தை தாண்டி ஒட்டுமொத்த இந்திய அளவில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.
இந்தியாவும் இலங்கையும் ஒரு காலத்தில் பிரிக்க முடியாத அரசியல் சக்தியாக இருந்தன அதற்கு காரணம் தமிழக அரசியல் களம், இலங்கையை சேர்ந்த தமிழர்களை மையமாக கொண்டு அரசியல் அதிரடிகள் நடைபெறுவது வழக்கம், இலங்கையை சேர்ந்த தமிழ் அமைப்பை சேர்ந்த தலைவர்கள் தமிழகம் வந்து தமிழ்நாட்டை சேர்ந்த தலைவர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.
ஆனால் இந்த நட்பு இன ஒற்றுமை எல்லாம் தற்போதைய அரசியல் சூழலில் விடுபட்டு போனது, இலங்கையில் ராஜபக்சே போன்றவர்களின் செயல்பாட்டால் தமிழர்கள் பாதிக்கப்பட்ட சூழலில் இந்தியாவில் குறிப்பாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவும் தங்களை காப்பாற்ற எதுவும் செய்யவில்லை என்ற ஆதங்கம் இலங்கை தமிழர்களிடம் இன்னமும் இருக்கிறது.
ஒரு கட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களை ஒதுக்கி வைக்கும் நிலைக்கு இலங்கை தமிழர்கள் சென்றனர், இந்த சூழலில் இலங்கையில் அதிரடி அரசியல் மாற்றம் உண்டானது, இலங்கை சீனா மற்றும் மற்ற நாடுகளிடம் வாங்கி பெரும் கடனால் அந்த நாட்டில் அத்திவாசிய சேவைக்கு தட்டுப்பாடு உண்டானது.
இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமராக இருந்த ராஜபக்சே மற்றும் அதிபர் கோத்த பய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் நாட்டை விட்டே தப்பி ஓடிவிட்டனர். இது வரை அனைவருக்கும் தெரிந்த விஷயம் ஆனால் இங்குதான் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த இரண்டு தமிழர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்துள்ளது.
இலங்கையில் இருந்து தப்ப முயன்ற அந்நாட்டின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே முதலில் இந்தியாவில் தஞ்சம் புக அடைக்கலம் கேட்டு இருக்கிறார், இந்திய அரசும் அவருக்கு அனுமதி கொடுக்க பரிசீலனை செய்ததாம் அதற்கு பல்வேறு அரசியல் கணக்குகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தொடர்புகொண்டு இலங்கையில் தமிழர்கள் நிலையை எடுத்து கூறி இருக்கிறார், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அண்ணாமலை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். அப்போது இலங்கையை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்களை சந்தித்து அவர் பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினார்.
மேலும் தமிழ் அமைப்பு சார்பில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் அண்ணாமலை கலந்து கொண்டு பேசி இருந்தார். இலங்கையில் அண்ணாமலை செயல்பாடு பலரையும் அப்போதே வியப்பில் ஆழ்த்தியது, காரணம் சமீபத்தில் எந்த தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளையும் இலங்கை தமிழர்கள் அழைத்து பொது கூட்டம் போன்றவற்றை நடத்துவது இல்லை.
அப்படி இருக்கையில் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பும் கொடுத்தனர், இந்த சூழலில் அங்கு தமிழக அரசியல் தலைவர்கள் நிலைப்பாட்டை அண்ணாமலை ஜெய்சங்கரிடம் தெரிவித்து இருக்கிறார், கோத்தபயாவை இந்தியாவில் அனுமதித்தால் அது மிக பெரிய எதிர்ப்பை தமிழர்கள் மத்தியில் உண்டாக்கும் என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
இதனை அமைச்சரும் ஏற்றுக்கொண்டு முறையாக பிரதமரிடம் நேரடியாக விளக்கத்தை கொடுத்து இருக்கிறார் இந்த நிலையில் தான் கோத்தபயாவை இந்தியாவில் அனுமதிக்க உறுதியாக இந்திய அரசாங்கம் மறுத்து இருக்கிறது. சக தமிழர்களாக அண்ணாமலை மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் இலங்கை தமிழர்களின் எண்ணத்தை பிரதிபலித்து கோத்தபயா இந்தியாவிற்குள் கால் வைக்க விடாமல் விரட்டி இருக்கின்றனர்.
தமிழர்களின் பலம் என்ன என்பதை அண்ணாமலை உறுதி படுத்தி இருக்கிறார் மொத்தத்தில் தமிழகத்தை தாண்டி ஒட்டு மொத்த தமிழர்களும் இந்திய பிரதமர் மோதியை ஏற்கும் சூழல் உண்டாகி யிருக்கிறது அதற்கு அண்ணாமலை முக்கிய கருவியாக மாறி இருப்பது இலங்கையின் தற்போதைய சூழல் மூலம் உறுதியாக தெரியவந்துள்ளது.
2024-ல் பிரதமர் மோடி இந்தியாவில் மீண்டும் ஆட்சிக்கு வரும் சூழலில் இலங்கையில் தமிழர்களின் அரசியல் அதிகாரம் முழுமையாக வெற்றி பெரும் என்றும் இலங்கை தமிழர்களுக்கு உண்மையான விடிவு காலம் மோடியின் ஆட்சியின் மூலம் வெளிப்படும் என்றும் கூறப்படுகிறது, உள்நாட்டு போராட்டத்தை தடுக்க இலங்கை அரசு இந்திய ராணுவத்தின் உதவியை கேட்ட போது பல்வேறு முறை பிரதமர் மோடி தீர்க்கமாக மறுத்து விட்டதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் இலங்கை தமிழர்களின் வாழ்விலும் ஏற்றம் வரும் என்று 2024-ல் தமிழக பாஜக பிரச்சாரம் செய்ய இருக்கிறதாம்.இனிதான் உண்மையான ஆட்டத்தை தமிழக அரசியல் களம் பார்க்க போகிறதோ?