விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படம் தற்போது சமூக வலைத்தளத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பீஸ்ட் படம் குறித்து நடிகர் விஜய்யின் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவான கருத்துக்களையும் விமர்சனங்களையும் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தாலும் ரசிகர்களையும் தாண்டி, நெறியாளர் மாதேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து படம் குறித்து இரவு பகல் பாராமல், தனது ஆதரவு குரல் கொடுத்து வந்தார்.
குறிப்பாக... "மாஸ் ஹீரோ சூப்பர் ஸ்டார் விஜய் 1 to 1 நேர்காணல்; சர்ச் மசூதி கோவில் மூணுமே போவாராம் விஜய் ; "தளபதி தலைவனாக மக்கள் தான் முடிவு செய்யனும், காலநேரம் தான் முடிவு செய்யும்" என தொடர்ந்து, விஜய்யை தன் தலைவனாக கொண்டாடி எழுதி இருந்தார் மாதேஷ். இப்படியான சமயத்தில், "பீஸ்ட் படம் வெற்றி பெற நீங்கள் விரதம் இருப்பதாக கேள்விப்பட்டேன் என்று நெறியாளர் தேன்மொழி, தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்ப.... அது தீயாய் பரவ தொடங்கி உள்ளது.
மேலும் தேன்மொழியின் கேள்விக்கு ஆதரவாக, ட்விட்டர்வாசிகள் பல்வேறு கேள்விகளை மாதேஷ்க்கு முன் வைத்திருக்கின்றனர். மேலும் முதல்வர் அவர்களைத்தான் தமிழக மக்கள் தளபதி என்று அன்போடு அழைக்கின்றனர். விஜய்யை ரசிகர்கள் மட்டும் தளபதி என அழைக்கின்றனர்.
ஆனால் மாதேஷ் இடதுசாரி ஆதரவு பத்திரிக்கையாளராக அறியப்பட்டாலும், விஜய்யை தளபதி எனக் குறிப்பிட்டது மட்டுமல்லாமல், இப்போது விஜய் முதல்வராவார் என ட்விட்டரில் தெரிவித்துள்ளதால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. மேலும் தமிழகத்தில் தளபதி என்றால் அது முதல்வர் ஸ்டாலின் அவர்களை மட்டும் தான் என நம்பப்படும் வேளையில், நடிகர் விஜய்யை தளபதி என குறிப்பிட்டு பேசுவது ஏற்கனவே சர்ச்சையாக பார்க்கப்பட்டு வருகிறது.
இப்படியான ஒரு தருணத்தில்தான் "பீஸ்ட்" படம் வெற்றி பெறுவதற்கு நீங்கள் விரதம் இருக்கிறீர்கள் என கேள்விப்பட்டேன் என நெறியாளர் தேன்மொழியும் கேள்வி எழுப்பி இருக்கிறார். மேலும் மொழி விவகாரத்தில், கூடுதலாக ஒரு மொழி கற்றுக்கொள்வதில் ஒரு மனிதனின் திறமை மென்மேலும் வளரும் என்பதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வரும் தேன்மொழி, மீடியாக்கள் கவர் செய்ய மறுக்கும் சில செய்திகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தற்போது நெறியாளர்கள் மாதேஷ் மற்றும் தேன்மொழிக்கு இடையே ட்விட்டரில் வாக்குவாதம் முற்றி உள்ளது. நெட்டிசன்களும் தங்களது ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக ஒருவர், " முதலில் இருவரில் தளபதி யார் என்பதை சொல்லிவிட்டு பின் ஆதரவு தெரிவியுங்கள் என கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.