24 special

#BREAKING உங்கள் அரசியலுக்குள் நான் வரவில்லை ஆனால்...? ஒன்றல்ல மூன்று ஆப்பு வைத்த ஆளுநர்..!

rn ravi and mk stallin
rn ravi and mk stallin

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்க வேண்டும் என திமுக போராடி வரும் நிலையில் ஆளுநர் மூன்று மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய தகவல் தற்போது தெரியவந்துள்ளது.


திமுக சார்பில் இரண்டாவது முறையாக நிறைவேற்றபட்ட நீட் விலக்கு மசோதாவிற்கு ஆளுநர் "ரவி" ஒப்புதல் அளிக்கவில்லை என நேற்று மக்களவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில் ஆளுநர் கூட்டுறவு சங்க திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்டவற்றிற்கும் விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியது தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆளுநர் மாளிகை தெரிவித்த கருத்து பின்வருமாறு :- கூட்டுறவு சங்க திருத்த மசோதாவைப் பொருத்தவரை, அரசு ஊழியர்களான கூட்டுறவு சங்க பதிவாளர்கள், விதிகளை மீறி செயல்படுவதாக கூறப்படும் சங்கங்களின் செயல்பாட்டை இடைநிறுத்தி வைக்கவும் விசாரணையின்றி கலைக்கவும் உத்தரவிட அவர்களுக்கு அதிகாரம் உள்ளது. இந்த அம்சத்தை ஆளுநர் ஆட்சேபித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பியபோதும் மாநில அரசிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை என்கிறது ஆளுநர் தரப்பு. அடுத்ததாக பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதாவில், பல்கலைக்கழக சிண்டிகேட் நிர்வாகக் குழுவில் நியமிக்கப்படுபவருக்கு கல்வித்தகுதியோ அனுபவமோ தேவையில்லை என்று கூறப்பட்டுள்ள அம்சத்தை ஆளுநர் ஆட்சேபித்துள்ளார். எவ்வித கல்வித் தகுதியோ அனுபவமோ இல்லாத ஒருவரை பல்கலைக்கழக நிர்வாகக் குழுவில் எப்படி சேர்க்க முடியும் என கேள்வி எழுப்பி மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்கிறது ஆளுநர் தரப்பு.

இந்த இரண்டு மசோதாக்கள் மீதும் உரிய பதில்கள் கிடைத்தால் மட்டுமே அவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு சமர்ப்பிக்கப்படும் என்றும் அவரது தரப்பு தெரிவிக்கிறது. மேலும் பண மசோதா தொடர்புடைய மசோதா தவிர வேறு எந்த மசோதாவாக இருந்தாலும் ஆளுநருக்கு திருப்தி ஏற்பட்டால் மட்டுமே ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்புவார் என்று ஆளுநர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில்மேல் முதல்வர் என்னை சந்தித்த போது மூன்று மசோதாக்களில் உள்ள சட்ட சிக்கல்கள் பற்றி தெளிவாக விளக்கி கூறிவிட்டேன், அதை அருகில் இருந்த தலைமை செயலாளர் நான் என்ன பேசினேன் என்பதை புரியவைத்து இருப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.



மேலும் அவர்கள் அரசியல்வாதிகள் அவர்கள் அரசியலுக்குள் நான் நுழைய விரும்பவில்லை, ஆனால் என்னுடைய பணியை நான் செய்து வருகிறேன் அரசியல் அமைப்பு சட்டம் 168 குறித்து அவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என பொட்டில் அடித்தற்போல் பதில் கொடுத்து இருக்கிறார் ஆளுநர்.  ஆளுநரை பல்கலைக்கழக வேந்தர் என்ற அந்தஸ்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என திமுக கூறிய நிலையில் தனது அதிகாரம் என்ன என ஒன்றிற்கு மூன்று மசோதாவை உரிய விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பி நிரூபித்து இருக்கிறார் ஆளுநர்.