24 special

பேரறிவாளன் விடுதலை "சிம்பிளாக பதில்" சொல்லிய பானு கோம்ஸ் !

banu gomes
banu gomes

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த குற்றவாளியான பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார், அவரது விடுதலையை வரவேற்று பல கட்சிகள் வாழ்த்து தெரிவித்து வரும் சூழலில் நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவரை கொலை செய்த நபர்களுக்கு விடுதலை கொடுப்பது தவறு எனவும் தமிழக முதல்வர் குற்றவாளியை கட்டிப்பிடித்து வரவேற்று இருப்பது தவறு எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.


இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர், இந்த சூழலில் அரசியல் விமர்சகர் பானு கோம்ஸ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் அதில், ஒவ்வொரு high profile வழக்கும்...நம் சட்டங்களில் உள்ள இடைவெளிகள் & தெளிவற்ற முடிச்சுகளை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் அவற்றை கவனித்து ..சட்ட திருத்தங்களை கொண்டு வந்து தீர்வினை தருவது இந்திய மத்திய அரசினால் மட்டுமே செய்ய முடிகிற கடமை என குறிப்பிட்டுள்ளார். சட்டத்தை திருத்துவது மட்டுமே இதற்கு முழுமையான தீர்வாக அமையும் என பானு கோம்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு புறம் என்றால் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை கண்டித்து இருக்கிறார், பேரறிவாளன் நிரபராதி என்பதற்காக விடுதலை செய்யப்பட வில்லை அவர் குற்றவாளி தான் இத்தனை ஆண்டு காலம் சிறையில் இருந்துள்ளார் இனி ஒரு அமைதியான வாழ்வை வாழட்டும்.

அதற்காக அவர் கொண்டாடபட வேண்டியவர் அல்ல தமிழக முதல்வரே வரும் கால சந்ததியர்களுக்கு ஒரு தவறான முன் மாதிரியை ஏற்படுத்துகிறார்,ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக ஒரு அரசு செயல்படுகிறது இவர்களின் செயல்பாடுகளின் மீது பெரிய சந்தேகம் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.