தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக அரசின் அடி நாதமாக இருக்கின்ற உளவுத்துறை டிஜிபி மீது தெரிவித்த புகார், அரசியலை கடந்து பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது, உளவுத்துறை டிஜிபி மீது அண்ணாமலை குற்றசாட்டு வைத்த நிலையில் இது குறித்து விரைவில் மத்திய அரசு தீவிரமாக களம் இறங்கும் என்று கூறப்படுகிறது.
டிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் குறித்தும் வழக்கு குறித்தும் முதலில் பார்க்கலாம். 2019-ம் ஆண்டு போலி ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்றதாக மதுரை க்யூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்கின்றனர்.
சில அண்டை நாட்டினரும் ஜோடிக்கப்பட்ட ஆவணங்களை பயன்படுத்தி பாஸ்போர்ட் பெற்றதாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகு வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் ஆகையால் விசாரணையை வேறு அமைப்பிற்கு மாற்றவேண்டுமென கோரி முருகேச கணேசன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் 01-02-21-ம் தேதி மனுதாக்கல் செய்கிறார்.பிறகு 09-02021-ம் தேதி அந்த மனுவிற்கு WP-2563/2021 எண் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படுகிறது .
அதில் மனுதாரர் 14 நபர்களை எதிர்மனுதாராக சேர்கிறார்.அதில் 11-வது நபர் தான் அப்போதைய மதுரை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம். 11-02-21-ம் தேதியன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வில் மனு விசாரணைக்கு வருகிறது
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எந்த முன்னேற்றமும் இல்லாததால், விசாரணையை வேறு ஏஜென்சிக்கு மாற்ற வேண்டும் என்று கோருகிறார்.அப்போது இன்ஸ்பெக்டர் முதல் முதல் உயர் அதிகாரி வரை உரிய பதவியில் இருக்கும் நபர்களை பிரதிவாதிகளாக ஏன் சேர்க்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றம் கேட்கிறது
நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, குற்றம் நடந்த காலத்தில் அவர்கள் பணியாற்றிவந்தவர்கள் என்பதால் வழக்கில் எதிர்மனுதாரார்களாக சேர்க்கப்பட்டுள்ளனர் என மனுதாரர் முருகேச கணேசனின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகிறார்.
அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் வழக்கு சரியான முறையில் நடந்து வருகிறது.சுமார் 175 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.அடையாளம் காணப்பட்ட 22 குற்றவாளிகளில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிப்பட்ட நபர்கள் தவிர, மாவட்ட பாஸ்போர்ட் அலுவலக அலுவலகத்தைச் சேர்ந்த ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார் எனக்கூறுகிறார்.
மேலும் 3 காவல்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,அதே நேரம் சில தபால் அதிகாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனவே, விசாரணையை மாற்ற தேவை இல்லை என அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறுகிறார்
மனுதாரர் முன்வைத்துள்ள முதன்மை வழக்கு, நிலைய அலுவலர்களின் உடந்தையுடன் குற்றம் நடந்துள்ளது என்பதே,அது புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உட்பட்டது. எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பங்கு என்ன என்பது குறித்து முறையாக விசாரிக்கப்படும் என்றும் கூறுகிறார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு நீதிபதிகள் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இம் மனுவில், மற்ற அதிகாரிகளுக்கு எதிராக எந்தத் தகவலும் இல்லாத நிலையில், அவர்கள் மீது வழக்குத் தொடரத் தேவையில்லை என்று கூறுகிறது. இந்த விஷயத்தைப் பொறுத்தவரை, மாற்றுவதற்கான எந்த காரணத்தையும் நாங்கள் காணவில்லை எனக்கூறுகிறது
ஆனாலும் வழக்கின் உண்மைகள்,சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, உத்தரவின் நகல் கிடைத்த நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க 9-வது பிரதிவாதிக்கு நாங்கள் கட்டளையிடுகிறோம். 7-வது பிரதிவாதியை மேற்பார்வையிடவும் கண்காணிக்கவும் 11-02-21 ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இதன் பிறகு திமுக ஆட்சியில் இந்த விசாரணை முறையாக நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது, இந்த சூழலில்தான் சமீபத்தில் போலி பாஸ்போர்ட் உடன் ஒருவர் பிடிபட்டதும், இந்தியாவில் பல்வேறு நபர்களின் நடமாட்டம் இருப்பதாக மத்திய உளவுதுறை அதிகாரிகள் தகவல் கொடுத்தும் மாநில உளவுத்துறை அமைதியாக இருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளதாம்.
பல்வேறு முன்னாள் மூத்த காவல்துறை அதிகாரிகளும் இந்த விவகாரம் குறித்து மத்திய அரசிற்கு கடிதம் எழுத இருப்பதால் விரைவில் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்று கூறப்படுகிறது, அண்ணாமலை அமைச்சர்கள் மீது வைத்த குற்றசாட்டு அரசியல் ரீதியாக கடும் அதிர்வலைகளை உண்டாக்கிய நிலையில் இப்போது அரசு அதிகாரிகள் மீது நேரடியாக வைத்த குற்றசாட்டு பற்றி எரிய தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த வழக்கில் NIA களம் இறங்கும் என்றும் அதன் பின்னணியில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.