24 special

போலீசாரின் கைக்கு பூட்டுப்போடும் திமுகவின் அராஜகம் - வெளுத்து வாங்கும் பாஜக தலைவர்..!

Annamalai
Annamalai

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் போலீசார் சுதந்திரமாக செயல்படாமல் திமுக அரசு தடுத்ததாகவும், உளவுத்துறை அலட்சியத்துடன் செயல்பட்டதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். 


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ம் வகுப்பு மாணவி பள்ளியின் 3வது மாடியில் இருந்து குதித்து மரணமடைந்ததாக கூறப்படுகிறது. மாணவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், வழக்கை முறையான் கோணத்தில் விசாரிக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.

மாணவி 12ம் தேதி இறந்த நிலையில் 17ம் தேதி கனியாமூர் பள்ளியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. ஆயிரகணக்கானோர் திரண்டு பள்ளியின் பொருட்களை அடித்து சேதப்படுத்தியதுடன், வாகனங்களுக்கும் தீயிட்டு கொளுத்தினர். பள்ளியில் அரங்கேறிய வன்முறை இந்திய அளவில் திமுக அரசின்  மெத்தனபோக்கையும், அராஜகத்தையும் பறை சாற்றுவதாக விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சியின் நேர்க்காணலில் பங்கேற்ற மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மாணவி மரணத்தில் போலீசாரும், உளவுத்துறையும் தங்களுக்கான கடமையை முறையாக செய்யவில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இது தொடர்பாக பேசிய அடுக்கடுக்கான கேள்விகளையும், குற்றச்சாட்டையும் திராணியற்ற திமுக அரசு மீது நேரடியாக வைத்தார். அவர் பேசுகையில்,  “மாணவியின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததால், அதற்கு உரிய பதிலை கண்டறிவது காவல்துறையின் கடமை. ஆனால் அதை அவர்கள் செய்ய தவறிவிட்டனர்.

  போராட்டம் என்ற பெயரில் பள்ளியில் நடைபெற்ற வன்முறை திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது. முதலில் சென்ற 500 பேர் வந்த நிலையில், அடுத்தடுத்து வந்த 4000 பேர் வன்முறை, கலவரம் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர். சமூக விரோதிகளால் பள்ளி சூறையாடப்பட்டது திமுக அரசின் ஆளும் தன்மைக்கு மிகப்பெரிய அவமானம். 

மாணவி மரணத்தில் காவல்துறையின் மெத்தனம் முதல் குற்றமாகும்.திமுகவின் அரசியல் சதுரங்கத்தால் காவல்துறையால் சுதந்திரமாக செயல்பட முடியாமல் முடங்கியது இரண்டவது குற்றம்.

ஏனெனில், குற்றவழக்கில் நடவடிக்கை எடுத்தால் அரசு தங்களை பணிநீக்கம் செய்துவிடுமோ என போலீசார் அச்சத்தில் இருந்துள்ளனர். அதனால், அவர்கள் தெளிவான முடிவை எடுக்க முடியாமல் அமைதியாக இருந்துள்ளனர். மாணவி இறந்த 2வது நாளே வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜக சார்பில் உடனடியாக மனு அளிக்கப்பட்டது. ஏனெனில், பள்ளியில் சமூக விரோதிகள் கலவரம் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதனால், வழக்கை சிபிசிபிஐடி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மாணவி மரணத்தை தொடர்ந்து 5வது நாள் கலவரம் வெடிக்கும் வரை திமுக அரசு வேடிக்கை பார்த்து வந்தது. அதுவரை சும்மா இருந்த திமுக அரசு, கலவரம் ஏற்பட்டதற்கு பிறகு உளவுத்துறை டிஐஜியை ஏன் மாற்ற வேண்டும்..? இதில் இருந்தே உளவுத்துறை அரசியல் நகர்வுகளால் தோல்வியை தழுவியது அப்பட்டமாக காட்டுகின்றனர். 

உளவுத்துறை மட்டும் இல்லை, அராஜ திமுக அரசால் போலீசாரும் மக்களை காக்க அச்சமடைகின்றனர். தவறுகள் நடந்தால் உடனடியாக போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அவர்கள் தமிழக அரசுக்கு சம்பவத்தை தெரிவித்து, அவர்களின் அனுமதி பெற்ற பிறகே, அடுத்தக்கட்ட நகர்வு உள்ளது.

தவறுகளை தட்டிக்கேட்கும் சுதந்திரமான உரிமை கூட போலீசாருக்கு இல்லை. திமுக அரசின் இந்த அராஜக போக்கை தான் ஓராண்டாக கண்டித்து வருகிறேன்“ என்றார்.பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்து வைக்கும் ஒவ்வொரு  கருத்தும் மக்களை சிந்திக்க வைத்துள்ளது.