24 special

மிக முக்கியமான விஷயத்தை கண்டுப்பிடித்த மருத்துவர் ராமதாஸ்..! அதுவும் செவிலியர்கள் படிப்பில் இப்படியா? அட .

Doctor ramadhas
Doctor ramadhas

நம் முன்னோர்கள் காலத்தில் மிக அதிகமாக இருந்த வரதட்சணை, வரதட்சணை கொடுமை, பெண்கள் சந்தித்து வந்த பிரச்சனை உள்ளிட்ட அனைத்திற்கும் மாற்றாக, வரதட்சணை கேட்டால் சட்டப்படி தண்டிக்கப்படும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் வந்த பிறகு தற்போது வரதட்சணை கொடுமை குறைந்து உள்ளது என்றே சொல்லலாம்.


இருந்த போதிலும் பல இடங்களில் இன்றளவும் வரதட்சணை கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்படியான நிலையில் செவிலியர் படிப்புக்கான பாடத் திட்டத்தில் வரதட்சணையை நியாயப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் கொண்ட புத்தகத்தை நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கின்றார். அதில், செவிலியர்கள் படிக்கும் படிப்பில் சமூகவியல் பாட   புத்தகம் என்ற நூலில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல்வேறு கருத்துக்கள் இடம்பெற்றிருக்கின்றது.


டி.கே. இந்திராணி என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவின. மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையை கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும். வரதட்சணை ஒன்றுதான் மகளிர் கல்விக்கு ஊக்குவிக்கிறது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கின்றன. இது மிகவும் பிற்போக்கானவை.

இந்த கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று தெரியவில்லை. வரதட்சனை ஆதரவு பிரச்சார அமைப்பில் கூட வைக்க தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்பிற்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத் திட்டத்தில் இருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருக்கின்றார்.

தமிழகத்தை பொருத்தவரை தற்போது பெட்ரோல் டீசல் விலை உயர்வு ஒருபக்கம் மிகப் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் சொத்து வரி உயர்வு குறித்தும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இப்படியான ஒரு சமயத்தில் வரதட்சணை குறித்து ஒரு புத்தகத்தில் நியாயப்படுத்தி பேசியிருப்பதை மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கண்டறிந்து, அதனைக் கண்டிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு கண்டனம் தெரிவித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.