24 special

ஆளுநர், அண்ணாமலை டெல்லி பயணம் என்னதான் நடக்கிறது?

Annamalai and rn ravi
Annamalai and rn ravi

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லியில் இருந்து வந்த அறிவிப்பை தொடர்ந்து டெல்லி விரைந்து இருக்கிறார், இதற்கு முன்னர் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 19-ம் தேதி திடீர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அன்று மாலை 5.25 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் உதவியாளர்கள் சென்றனர் ஆளுநரின் திடீர் பயணத்திற்கு காரணம் கூறப்படவில்லை.


இந்த சூழலில் தமிழக அரசியலில் ஆளுனர் மற்றும் அண்ணாமலை இருவரின் டெல்லி பயணங்கள் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது, அதே நேரத்தில் TNNEWS24-க்கு கிடைத்த முக்கிய தகவல்களை பார்க்கலாம், அண்ணாமலை டெல்லி சென்றது இரண்டு முக்கிய சம்பவங்கள் குறித்ததாக பார்க்க படுகிறது ஒன்று தமிழக உளவுத்துறை ADGP டேவிட்சன் ஆசீர்வாதம் மீது எழுந்துள்ள போலி பாஸ்போர்ட் புகார் மற்றொன்று அதிமுகவில் நிகழ்ந்த அதிரடி அரசியல் மாற்றம்.

இந்த இரண்டு விவாகரங்களை குறித்து ஆலோசனை செய்ய அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது, டேவிட்சன் ஆசீர்வாதம் அவர் சார்ந்த கிறிஸ்தவ நாடார் சமூகத்தை சேர்ந்த மத போதகர்  ஒருவருக்கு ஆதரவாக இலங்கையை சேர்ந்த குறிப்பிட்ட அடையாளம் காணப்பட்ட நபர்களை  போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி இருப்பதாக குற்றசாட்டுக்கள் எழுந்து இருக்கின்றன.

அதில் 20 மேற்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் அந்த விவாகரத்தில் டேவிட்சன் ஆசிவாதம் விரைவில் சிக்கலாம் எனவும் அழுத்தம் திருத்தமாக கூறப்படுகிறது, இதில் சில நபர்கள் தமிழகத்தை சேர்ந்த முக்கிய இரண்டு கட்சிகளின் பினாமியாக சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து, துபாய் போன்ற நாடுகளுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தனக்கு கிடைத்த ஆதரங்களை அண்ணாமலை உள்துறை அமைச்சகத்திடம் அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது, இது ஒருபுறம் என்றால் தமிழகத்தில் அதிமுகவில் நடைபெறும் மாற்றங்கள் பெருத்த தலைவலியை பாஜகவிற்கு உண்டாக்கி இருக்கிறது, குடியரசு தலைவர் தேர்தல் நேரத்தை பயன்படுத்தி எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்ற நினைத்து காய்கள் நகர்த்தியதும், குறிப்பாக பன்னீர் செல்வம் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோரை கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி நீக்கியதை டெல்லி ரசிக்க வில்லை.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஒற்றை தலைமையாக வரவேண்டும் என எடப்பாடி பழனிசாமி பின்னால் நிற்கும் தலைவர்கள் முனுசாமி தொடங்கி தங்கமணி, வேலுமணி, சிவி சண்முகம் என பலரும் பாஜகவை தீவிரமாக எதிர்க்கும் நிலையில் உள்ளவர்கள் அப்படி இருக்கையில் நிச்சயம் எடப்பாடி பழனிசாமி நாளை காங்கிரஸ் கட்சியுடன் கை கோர்க்க மாட்டார் என நம்புவதற்கு பாஜக தயாராக இல்லை.

வளர்த்து விட்ட சசிகலா, ஆட்சியை காப்பாற்ற உதவிய ஓபிஎஸ் என இருவரையும் துரோகத்தால் வீழ்த்திய எடப்பாடி பாஜகவை எதிர்காலத்தில் தமிழகத்தில் வளரவிடாமல் உள். அரசியல் செய்வார் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறதாம் இந்த சூழலில்தான் விரைவில் டெல்லி தீவிரமாக களத்தில் இறங்கும் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் என்றால் உண்மையில் திமுக எடப்பாடி பழனிசாமி பின்னால்தான் இருக்கிறது என்று பாஜக சந்தேக்கிறதாம், கடந்த 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அறிவித்த வேட்பாளர் சம்பத்குமார் சாதாரண தொகுதியில் அறிமுகம் இல்லாத நபர் இது எடப்பாடி பழனிசாமி எளிதில் வெற்றிபெற உதவியது.

அதே நேரத்தில் பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் எனும் பலமான வேட்பாளரை திமுக அறிவித்ததில் இருந்து பாஜக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவரும் ஆடு புலி ஆட்டம் ஆடுவதாக சந்தேகம் கொண்டது, இந்த சூழலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வளர்ச்சி திமுக அதிமுக என இருவரை கடந்து தமிழகத்தில் சில அமைப்புகளுக்கு எதிராக முடியும் என கணக்கிட்டு இரண்டு கட்சிகளும் பாஜக வளர கூடாது என்ற ரீதியில் செயல்படுவதாக பாஜக கணக்கிட்டு உள்ளது.

இனி வரும் காலங்களில் பாஜக அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பை அரவணைத்து செல்லாது என்று மட்டும் தீர்க்கமாக முடிவெடுத்து இருப்பதாகவும், அதன் அரசியல் கணக்குகள் குறித்து ஆலோசனை செய்ய அண்ணாமலையை டெல்லிக்கு அக்கட்சி தலைமை அழைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இனி வரும் நாட்களில் தமிழக அரசியல் களம் எப்படி வேண்டும் என்றாலும் மாறலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அடுத்த பதிவில் ஆளுநர் அவரசர டெல்லி பயணம் அதன் பின்னணியில் தமிழகம் முழுவதும் NIA அதிகாரிகள் நடத்திய சோதனை என முக்கிய தகவல்களை சேகரித்து கொடுக்க இருக்கிறோம் மறக்காமல் TNNEWS24 DIGITAL பக்கத்தை FOLLOW செய்து கொள்ளவும்.