24 special

ஒன்றிணைந்த பிரிக்ஸ் தலைகள்.. டாலரைத் தூக்கி எறியும் இந்தியா அமெரிக்காவுக்கு ஆப்பு கன்பார்ம்!

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்கும் வீடியோ கான்பரன்ஸ் மாநாடு நடைபெற்றது.அண்மையில் பிரிக்ஸ் அமைப்பை, அமெரிக்கக் கொள்கைக்கு எதிரானது என அதிபர் டிரம்ப் விமர்சித்தார். பிரிக்ஸின் அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளும் நாடுகள், கூடுதலாக 10 சதவீதம் வரி விதிப்பை எதிர்கொள்ள நேரிடும் என்றும் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.


இந்த நிலையில் வீடியோ கான்பரன்ஸ் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அமெரிக்காவின் வரி பஞ்சாயத்துகளுக்கு நடுவே இந்த மாநாடு நடப்பதால் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இந்த மாநாடு பிரேசிலின் முயற்சியால் நடத்தப்படுகிறது. வளர்ந்து வரும் பெரிய நாடுகளை இலக்காகக் கொண்டு அமெரிக்கா விதித்துள்ள வரி விவகாரத்திற்கு தீர்வு காணவே இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முதல் காரணம் சொந்த கரன்சியில் வர்த்தகம். தற்போது ரஷ்யாவுடன் இந்தியா சொந்த கரன்சியில் வர்த்தகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ரஷ்யாவுடன் 90% அளவுக்கு நாம் சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்து வருகிறோம். 2024-25 நிதியாண்டில், இந்தியா-ரஷ்யா இடையேயான மொத்த வர்த்தகம் ரூ.42,940 கோடியாகும்.

அதேபோல ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடனும் சொந்த கரன்சி வர்த்தகத்தை நாம் தொடங்கியுள்ளோம். கடந்த 2023ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய வங்கியும் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனமும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனமும் கச்சா எண்ணெய்யை சொந்த கரன்சியில் விற்பனை/கொள்முதல் செய்து வருகின்றன.

இதற்கு முன்னர் டாலரில் வர்த்தகம் செய்த போது நாம் முதலில் டாலரை விலை கொடுத்து வாங்க வேண்டும். பின்னர் அந்த டாலரை வைத்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வெளிநாடுகளில் இருந்து வாங்க வேண்டியது இருந்தது. எனவே நமது சொந்த கரன்சியான ரூபாயின் மதிப்பு பெரிய அளவுக்கு வளரவில்லை.இப்போது  பிரிக்ஸ் நாடுகளுடன் சொந்த கரன்சியல் வர்த்தகம் செய்வதால், நம்முடைய கரன்சியின் மதிப்பு உயர்ந்திருக்கிறது.

மெரிக்கா டாலரின் தேவையை குறைத்துக் கொண்டாலே டிரம்ப் போடும் வரியின் பாதிப்புகளை நம்மால் எளிதில் எதிர் கொண்டு விட முடியும். எனவேதான் பிரிக்ஸ் நாடுகளுடன் மேலும் அதிகமாக சொந்தக்கரன்சியில் வர்த்தகம் செய்ய இந்தியா விரும்புகிறது. இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவே பிரிக்ஸ் மாநாடு, கூட்டங்கள், சந்திப்புகள் உள்ளிட்டவற்றில் இந்தியா தீவிரமாக பங்கெடுத்து வருகிறது. 

பிரிக்ஸ் மாநாட்டில்  பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங்  அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள, பிரிக்ஸ் நாடுகள் பரஸ்பர வெற்றியை இலக்காகக் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே பிரிக்ஸ் நாடுகள் இடையேயான வர்த்தகப் பற்றாகுறையை நிவர்த்தி செய்வதன் மூலம், நாம் ஒரு முன்மாதிரியாகத் திகழ முடியும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கரும் தெரிவித்துள்ளார்.நியாயமான, பாகுபாடற்ற, விதி சார்ந்த கொள்கைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாகவும் ஜெய்சங்கர்  கூறியுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா நெருக்கமாக இருப்பது அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனெனில் சொந்த நாட்டு கரன்சியில் வர்த்தகம் செய்யப்பட்டால் அமெரிக்க டாலருக்கு மதிப்பு இல்லாமல் போய்விடும். எனவேதான் பிரிக்ஸ் நாடுகளுடன் இந்தியா ஒன்றாக இருப்பதை டிரம்ப் சகித்துக் கொள்ள முடியவில்லை.இந்தமாநாடு முடிந்த சில மணிநேரத்தில் பிரதமர் மோடியை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.