
உலக அரசியலில் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது இந்தியா. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நட்பு பல ஆண்டுகளாக தொடர்கிறது. குறிப்பாக பாதுகாப்புத் துறையில், ரஷ்யா இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆதரவாக உள்ளது. இந்தியா பயன்படுத்தும் போர் விமானங்கள், டாங்குகள், ஏவுகணைகள் போன்ற பல உபகரணங்கள் ரஷ்யா இந்தியா கூட்டு முயற்சியால் உருவானதே. அமெரிக்காவின் மிரட்டல்களை தொடர்ந்து ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய பல நாடுகள் முன்வரவில்லை ஆனால் இந்தியா வர்த்தகம் செய்து வருகிறது.
இந்தியாவின் இந்த நெருக்கம் அமெரிக்காவுக்கு பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஏனெனில் சீனாவின் வளர்ச்சி அமெரிக்காவுக்கு சவாலாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில், இந்தியாவை தனது பக்கம் கொண்டு வர அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இந்தியா தனது பாரம்பரிய நண்பரான ரஷ்யாவை விட்டு விலக விரும்பவில்லை.இதன் காரணமாக வரி விதித்தால் இந்தியா அமெரிக்கா பக்கம் சாயும் என நினைத்திருந்த வேளையில் அதுவும் அமெரிக்காவுக்கு கைகொடுக்கவில்லை. தற்போது என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார் டிரம்ப். அமெரிக்கா, இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்தலும் ஆனால் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாகச் சொல்கிறது.
“எங்கள் தேசிய நலனே எங்களுக்கு முதன்மை. யாருடைய அழுத்தத்தையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுகிறது.
இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார். இதனால் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார். அங்கு அதிபர் புதினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.இதனை தொடர்ந்து புதின் டிரம்ப் நடைபெற்றது. இதில் டிரம்ப்க்கு பாடம் புகட்டியுள்ளார் புதின் அடியை தாங்க முடியாத அமெரிக்கா இன்னொரு வேலையை செய்துள்ளது. இந்தியா மீது கூடுதல் வரி இல்லை என புதின் முன் சத்தியம் செய்துவிட்டார் டிரம்ப்.
இதனிடையே வர்த்தக உறவு தொடர்பாகவும், வரி விதிப்பு தொடர்பாகவும் இந்தியாவும் அமெரிக்காவும் பேசி வந்தது. ஏற்கனவே அமெரிக்காவின் வர்த்தக குழுவுடன் ஐந்து கட்ட பேச்சு நடத்தப்பட்டது. அதில் சாதகமான தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. அமெரிக்கா இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், வரி குறைப்பு தொடர்பாக பேச்சு நடத்த, வரும் 25ல் டில்லி வர இருந்த அமெரிக்க வர்த்தக குழுவினரின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் 21-ம் தேதி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்துப் பேச உள்ளதாக கூறப்படுகிறது. இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. இதற்கிடையில் “ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளார். என அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக இருவரும் கூறினர். அதன்பின் செய்தியாளர்கள், இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத வரி பற்றி கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர், 'தற்போது அது பற்றி யோசிக்கவில்லை. இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அது பற்றி யோசிப்பேன்' என்றார். இதை வைத்து, டிரம்ப் வரியை குறைக்கும் மனநிலைக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.