புதுதில்லி : இந்தியாவில் தற்போது நிகழும் பரபரப்பான சூழலில் புதுதில்லி வந்தடைந்தார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர். இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கண்டனங்கள் தெரிவித்திருக்கும் வேளையில் அமைச்சரின் இந்த விசிட் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நேற்று ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஹூசைன் அமீர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷ்ங்கரை முதலில் சந்தித்தார். அதன்பின்னர் பாரதபிரதமர் நரேந்திரமோடியை சந்தித்தார். அமைச்சரை வரவேற்ற பிரதமர் இந்தியாவிற்கும் இரானிற்கும் உள்ள நீண்டகால நாகரிக மற்றும் கலாச்சார தொடர்புகளை நினைவுகூர்ந்தார்.
மேலும் தற்போது நடந்துவரும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான முயற்சிகள் குறித்தும் விவாதித்தார். கோவிட் தொற்றுநோய் காலகட்டத்திற்கு பிறகான பரிமாற்றங்களை விரைவுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் " ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸிக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதியை விரைவில் சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அதற்க்காக நான் காத்திருக்கிறேன் எனவும் பிரதமர் கூறியுள்ளார்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் அமைச்சருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் " ஈரான் நிதியமைச்சருடன் வர்த்தகம் சுகாதாரம் இருநாட்டு மக்களுக்கிடையேயான உறவுகள், இருதரப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஈரானில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு இந்தியா இலவச தடுப்பூசி வழங்கியது. அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதில் இருந்த சிக்கலை ஈரான் எளிதாக்கியிருந்தது. அதை மனமாரமத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பாராட்டினார். அடுத்த மூன்றுநாட்களுக்கு சுற்றுப்பயணம் செய்யவுள்ள ஈரான் அமைச்சர் மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களுக்கு செல்லவிருக்கிறார்.