24 special

பதவி அம்போ ...ஒப்பாரி வைத்த கே.என் நேரு..... அடுத்த அமைச்சர் எ.வ. வேலு! அதிரடியாக நுழையப்போகும் ED

E.V.VELU,K.N.NEHRU
E.V.VELU,K.N.NEHRU

"திமுகவில் இருப்பவர்களை குறி வைத்து அடிப்பதற்கு பாஜக தயாராகிவிட்டது. முதல் பலி நானாகி விட்டேன்.. எது வந்தாலும் நிற்போம் அதில் எந்தவித மாற்றமும் இல்லை. அடிக்க அடிக்க பந்து மாதிரி எழுந்திருக்க வேண்டுமே தவிர விட்டு விட்டு போகக்கூடாது" என திருவாரூரில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார்.தமிழ்நாட்டில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்ற பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்திருப்பதாக அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பியது. அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளிட்ட பணிகளில் 2,538 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்றுள்ளது.


அதில், ஒவ்வொரு பதவிக்கும் ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம் வரை லஞ்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதற்காக சில செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்களும் அவர்களது நெருங்கிய தொடர்புடையவர்களும் தேர்வு செயல்முறையை முறைகேடாக மாற்றி, 2025 ஆகஸ்டில் குறைந்தது 150 தேர்வர்ளுக்கு நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.

"திமுகவில் உள்ள ஒவ்வொருவரையும் குறிவைத்து தாக்குவதற்கு பாஜக தயாராகிவிட்டது. அதில் முதல் பலியாகத் நானாகிவிட்டேன். இருப்பினும், எந்தத் தாக்குதலையும் எதிர்கொண்டு நிற்போம். அடிக்க அடிக்க பந்து மாதிரி எழ வேண்டும் துவண்டு விடக்கூடாது" என்று பேசி உள்ளார்.நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இந்த முறைகேடு தெரியவந்ததாகவும் அமலாக்கத்துறை தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அமைச்சர் கே.என்.நேரு இவ்வாறு பேசியுள்ளார்.

இதனையடுத்துதிருவண்ணாமலை  மாவட்ட அமைச்சரின் துறையில் செய்யப்பட்ட பணிகள் தரமற்று இருக்கின்றன’ என்று துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள், ஒப்பந்ததாரர்கள்மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்திருப்பதால், அந்த வழக்கை நூலாகப் பிடித்து அமலாக்கத்துறை உள்ளே வந்துவிடுமோ என்று பதறிப்போயிருக்கிறது அந்தக் கூடாரம். 

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத் திட்டங்களில் தரமற்ற பணிகளால் அரசுக்குக் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை  அதிர்ச்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை அமைச்சர் எ.வ. வேலுவை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது; ஏனெனில் இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையில் எடுப்பதற்கான முகாந்திரம் ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தரமற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதை லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் கண்டறிந்துள்ளது.தஞ்சாவூர், சிவகங்கை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் சாலை மேம்பாடு மற்றும் வலுவூட்டும் பணிகளில் நடந்ததாகக் கூறப்படும் கடுமையான முறைகேடுகள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விரிவான விசாரணை நடத்தியுள்ளது

விசாரணையின் போது, வேலை நடந்த இடங்களில் இருந்து கோர் மாதிரிகளை எடுத்து, சூப்பர் சோதனை மற்றும் தரச் சோதனைகளை அதிகாரிகள் நடத்தினர்.வேலை நடந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட அளவுகளுக்கும், அளவீட்டுப் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்ட அளவுகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டன.அதிகாரப்பூர்வ ஆவணங்களில் பதிவுகளை அதிகரிக்க, அதிகாரிகளுக்குப் பணம் வழங்கப்பட்டுள்ளது.நவம்பர் 2018 முதல் ஜூலை 2023 வரை நடத்தப்பட்ட விசாரணையில் திரட்டப்பட்ட ஆதாரங்கள் தெளிவாகக் காட்டுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை கூறியுள்ளது. 

இந்தத் திட்டத்தில் ஈடுபட்டிருந்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களுடன் கிரிமினல் சதியில் ஈடுபட்டு, தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அரசுப் பணத்தை மோசடி செய்துள்ளனர் என்று லஞ்ச ஒழிப்புத்துறையின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஆதாரங்கள் இருந்தபோதிலும், தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க மறுத்தது.இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் இந்த வழக்கை அமலாக்கத்துறை (ED) கையிலெடுக்க போதிய முகாந்திரம் இருப்பதால், துறை அமைச்சர் எ.வ. வேலு அச்சத்தில் இருக்கிறார். அமலாக்கத்துறை விசாரணை நடத்தினால் துறையில் நடந்துள்ள பெரும் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.