தமிழகத்தில் இருந்து அரசியல் இயக்கம் சாராத இருவரை மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்ய பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷா முடிவு செய்து இருப்பதாகவும் ஜனாதிபதி நியமனம் மூலம் இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தமிழகத்தை சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகியோருக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதில் பத்திரிகை, சினிமா மற்றும் சமூக ஆர்வலர்கள், கட்டுரையாளர்கள் ஆகியோரை கொண்ட 5 நபர்களின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது,
தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தலில் ஒருவர் வெற்றி பெற, குறைந்தது 35 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை தற்போது தமிழகத்தில் பாஜகவிற்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் எனவே தமிழகத்தை பிரதிநிதித்துவம் படுத்தும் வகையில் ஜனாதிபதி நியமனம் மூலம் இருவரை தேர்வு செய்ய பிரதமர் முடிவு எடுத்து இருக்கிறார்.
ஜனாதிபதி 12 பேரை ராஜ்யசபா எம்.பி.,யாக நியமிக்கலாம் என்கிறது சட்டம். விளையாட்டு, சமூக சேவை என பல துறைகளில் சிறந்து விளங்குபவர்களை இப்படி எம்.பி.,யாக நியமிக்க முடியும். சச்சின் டெண்டுல்கர் உட்பட பலர் இப்படித்தான் ஜனாதிபதி நியமனம் வாயிலாக எம்.பி.,யானார்கள்.
இந்த வழியைப் பின்பற்றி இரண்டு தமிழர்களை எம்.பி.,யாக்க மோடி திட்டமிட்டுள்ளார். யார் அந்த இருவர் என, பா.ஜ.க , வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இதில் சினிமா துறையில் இசை துறையை சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் இதில் இளையராஜா பெயர் பரிசீலனையில் இருப்பதாகவும், பத்திரிகை துறையில் துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி ஆகியோர் பெயரும்,
மேலும் பல்வேறு திட்டமிடல் கட்டுரையை சமர்ப்பித்தவரும் நதி நீர் பங்கீடு விவகாரத்தில் ஆழ்ந்த அறிவு கொண்டவருமான "பூமா குமாரி" ஆகியோர் பெயர்கள் இதில் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் இளையராஜா மற்றும் துக்ளக் குருமூர்த்தி போன்றவர்கள் தங்கள் துறைகள் மூலம் முன்பே மக்களுக்கு அறிமுகமானவர் என கூறலாம்.
பூமா குமாரி என்பவர் தென் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதும், மறைக்கப்பட்ட வ.உ.சி வரலாறு என்ற புத்தகத்தை எழுதியுள்ளார் முன்பே பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போன்றவர்களிடம் அறிமுகமானவர் என்றும் அறியப்படுகிறது. இவர்கள் தவிர மேலும் இருவரது பெயர்களும் இந்த பட்டியலில் பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது.