
அமெரிக்காவின் அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்பு இந்தியா மீதான அவரது நடவடிக்கை விரும்பத்தகாத வகையில் உள்ளது. குறிப்பாக, சமீபத்தில் அவர் விதித்த 50 சதவீத ஏற்றுமதி வரி, ஆபரேஷன் சிந்தூர் விவகாரத்தில் பொய் சொல்லி தம்பட்டம் அடித்தது இந்திய -ரஷ்ய உறவிற்கும் இடையூறு செய்யும் வகையில் அமெரிக்க நடந்த கொண்ட விதம் அனைத்தும் இந்தியா அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியது.
டிரம்ப் தனது செயல்பாட்டால் இந்தியா தனக்கு அடிபணியும் என்று எதிர்பார்த்த ட்ரம்பிற்கு பேரதிர்ச்சியாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு அமைந்துள்ளது. சீனாவில் நடந்த இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட 25 நாட்டின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற ரஷ்ய அதிபர் புடினும், சீன அதிபர் ஜின் பிங்கும் பிரதமர் மோடியுடன் முன் எப்போதும் இல்லாத வகையில் மிகவும் நெருக்கமான நட்புடன் மோடியை கவனித்தார்கள். குறிப்பாக, இந்த மாநாட்டின் ஒரு பகுதியில் புதின் கையைப் பிடித்து மோடி அழைத்துக் கொண்டு சென்று ரஷ்ய அதிபர் புதின் - இந்திய பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் ஆகிய மூன்று பேரும் கல்லூரி நண்பர்கள் போல பேசிக் கொண்ட வீடியோ உலகம் முழுவதும் இணையத்தில் வைரலானது. இதற்கிடையில் குறிப்பாக இந்தியாவும் சீனாவும் இணைந்து செயல்பட வேண்டும் எனும் ரீதியில் சீன அதிபர் பேசியிருந்தார்.
இந்தச் சூழலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்கா இந்தியாவுடன் குறைந்த அளவிலான வர்த்தகத்தையே மேற்கொள்கிறது. இதனை மிகச் சிலர் தான் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் இந்தியா, அமெரிக்காவுடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறது இந்தியாவுக்கு அமெரிக்கா மிகப் பெரிய சந்தை. இதுவரை இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான உறவாகவே இருக்கிறது. இதற்கு காரணம், அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி விதித்திருந்தது. இதனால், அமெரிக்க நிறுவனங்களால் இந்தியாவில் வர்த்தகம் செய்யமுடியவில்லை. இது ஒருதலைப்பட்சமான பேரழிவு.. என புலம்பி தள்ளியுள்ளார்.
மேலோட்டமாக பார்த்தால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இந்த ஆதங்கம் அவர் தரப்பில் நியாயம் இருப்பதைப் போல தோன்றும்.. அதில் துளியளவும் உண்மையில்லை. டிரம்ப் சொல்வது விஷமத்தனம் என்பது புரியும். அமெரிக்காவுடன் இந்தியர்கள் வர்த்தகம் செய்யும் கடல் உணவுகள், விவசாய பொருட்கள், முட்டை, பின்னலாடை, ஜவுளி பொருட்கள், பட்டாசு, தீப்பெட்டி, காலனி வகைகள், பொறியியல் பொருட்கள், காய்கறிகள், பழங்கள், மசாலா பொருட்கள் என அத்தனையுமே கலப்படம் இல்லாத சுத்தமான தயாரிப்புகள்,
ஆனால் இந்தியாவில் பல ஆண்டுகளாக அமெரிக்கர்கள் வர்த்தகம் செய்யும் பெப்சி, கோக், பர்கர், கேஎப்சி, மெக் டொனால்டு உள்ளிட்ட பொருட்கள் எல்லாமே கலப்படம் நிறைந்த உடலுக்கு கேடான பொருட்கள், மேலும் தற்போது அமெரிக்காவில் தயார் செய்யப்படும் இயந்திர பால், மரபணு மாற்றப்பட்ட சோயா பீன்ஸ், பார்லி உள்ளிட்ட பொருட்களை இந்திய சந்தையில் விற்க, டிரம்ப் அனுமதி கேட்டார் , அதற்கு பிரதமர் மோடி மறுத்துவிட்டார். அதில் இருந்தே துவங்கியது இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல்கள்.இந்த நிலையில் தான் ஆப்ரேசன் சிந்தூர் நடவடிக்கையில் மூக்கை நுழைத்து மூக்கு அறுபட்டு போனார் டிரம்ப்!
சீனாவிலல் நடைபெற்ற சந்திப்பில் மோடி, புதின், ஷி ஜின்பிங் மூவரும் ஒன்றாக நின்று சிரித்துக் கொண்டு இணக்கமாகப் பேசியது, இவர்களின் ஒற்றுமைக்கான 'சிக்னல்' என்று எடுத்துக்கொள்ளலாம். இதனை தொடர்ந்து தான் அமெரிக்கா டிரம்ப் புலம்ப ஆரம்பித்துள்ளார்.