
ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வச்சு செய்துள்ளார். .
பாரத பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் சென்றுள்ளார். அங்கிருந்து
சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஜி ஜின்பிங் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி சீனா சென்று அந்த மாநாட்டில் பங்கேற்ற உள்ளார். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்திக்க வாய்ப்புள்ளது. ரஷ்யா, சீனா, இந்தியவை குறிவைத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீண்டி வரும் நிலையில் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே உலகநாடுகளுக்கு வரியை போட்டு ஹீரோ என காண்பிக்க நினைத்த டிரம்ப்பை ஜீரோவாக்கியுள்ளது இந்தியா. குறிப்பாக அமெரிக்காவின் எதிரி நாடாக இருக்கும் சீனாவும், நம் நாடும் பகையை மறந்து செயல்பட முன்வந்துள்ளது. இதற்கிடையில் பிரதமர் மோடி ஜப்பானின் "தி யோமியோரி ஷிம்புன்" நாளிதழுக்கு பேட்டியளித்தார்.அந்த பேட்டியில் இந்தியா - சீனாவின் உறவின் முக்கியத்துவம் பற்றி கூறினார். அந்த பேட்டியில் பிரதமர் மோடி, ‛ உலகப் பொருளாதாரத்தில் தற்போது நிலவும் நிலையற்ற தன்மை நிலவுகிறது.
இதனை கருத்தில் கொண்டு இரண்டு பெரிய பொருளாதார நாடுகளான இந்தியாவும் சீனாவும் உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையை கொண்டு வர ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்'' என்றார். இதன்மூலம் சீனாவுடன் சேர்ந்து செயல்படுவது உறுதி என்பதை மோடி உணர்த்தி உள்ளார். இது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு பெரும் அதிர்ச்சியாக அமைகிறது.
மேலும் பிரதமர் மோடி கூறும்போது, ‛‛பரஸ்பர மரியாதை, பரஸ்பர ஆர்வம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளை நீண்ட எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்னேற்றவும், வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்வதற்கான தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும் இந்தியா தயாராக இருக்கிறோம்.
இந்தியாவும், சீனாவும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகள் இடையேயான நிலையான, இணக்கமான இருதரப்பு உறவுகள் என்பது பிராந்தியம் மட்டுமின்றி உலகளவில் அமைதியான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். அதாவது ஆசிய பிராந்தியத்துக்கும், உலகத்துக்கும் முக்கியமானதாக இருக்கும்'' என்றார்.
அமெரிக்காவை எடுத்து கொண்டால் சீனாவை எதிரியாக நினைக்கிறது. இதனால் இந்தியாவை வைத்து சீனாவை சீண்ட நினைத்தது. ஆனால் இப்போது டிரம்பின் வரியால் நம் நாடு சீனாவுடன் கைகோர்த்துள்ளது. இது டிரம்புக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் டெக் உலகின் தாதா என அமெரிக்கா மார்தட்டி வரும் நிலையில் அதற்கும் ஆப்பு வைக்க தயாராகிவிட்டது இந்தியா இந்தியாவும் ஜப்பானும் இணைந்து ரோபோடிக்ஸ், செமிகன்டக்டர், கப்பல் கட்டுதல் மற்றும் அணு சக்தி துறைகளில் வெற்றிகரமான ஆட்டோமொபைல் கூட்டாளிகளாக செயல்பட்டு வருகிறார்கள் இதனை இன்னும் மேம்படுத்தும் வகையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு இருக்கிறது. இந்தியாவின் திறமை ஜப்பானின் தொல்நூட்பம் இனி உலகை ஆட்சி செய்யும்.
இது ஒருபுறம் இருந்தால் மற்றொரு புறம் இனி வரும் நாட்களில் இந்தியாவும், சீனாவும் சேர்ந்து செயல்படும் பட்சத்தில் டிரம்ப் சீண்டினால் இருநாடுகளும் சேர்ந்து பதிலடி கொடுக்க வாய்ப்புள்ளது. இதனால் சீனா - இந்தியா உறவு வலுப்பெறுவது அமெரிக்காவுக்கு பெரும் பிரச்சனையாகலாம் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.