சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணிக்கு தமிழக மக்கள் மிகப்பெரிய வெற்றியை தந்தார்கள். இந்தியாவிலேயே 3-வதாக பெரிய இயக்கமாக தி.மு.க. உள்ளது.
தந்தை பெரியார், அண்ணாவை நான் நேரில் பார்த்தது கிடையாது. கருணாநிதி, அன்பழகனை நேரில் பார்த்திருக்கிறேன்.கட்சியின் அடிமட்ட தொண்டர்களையும், மூத்த நிர்வாகிகளையும் அண்ணா, பெரியாரின் மறு உருவமாக நான் பார்க்கிறேன்.
கட்சியில் உள்ள அனைவருக்கும் ஒரு அன்பு வேண்டுகோள். என் மீது பாசம், அன்பு காட்டுவதாக நினைத்துக்கொண்டு கோஷம் போடும் போது 3-ம் கலைஞர், இளம் தலைவர் என அப்படியெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது.
கலைஞர் என்றால் அது ஒரே ஒரு கலைஞர் தான். என்னை சின்னவர் என்று அழைக்கிறார்கள். அது மகிழ்ச்சியாக உள்ளது.பெரியவர்களோடு ஒப்பிடும் போது நான் சின்னவர் தான். இந்த திடலில் இதற்கு முன்பு நடந்த நிகழ்ச்சிளில் பேசிய இந்திரா காந்தி பிரதமரானார், கருணாநிதி பல வெற்றிகளை கண்டுள்ளார், மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார்.
இந்த திடல் ராசியான திடல் என்று எனக்கு முன்னால் பேசியவர்கள் சொன்னார்கள். எனக்கு ராசி மீது நம்பிக்கை கிடையாது. உழைப்பின் மீது நம்பிக்கை உண்டு இனி என்னை சின்னவர் என்றே அழையுங்கள் என்று குறிப்பிட்டார்.
இது கடும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது இந்த சூழலில் ராஜேஸ்வரி பிரியா கடுமையாக உதயநிதியை விமர்சனம் செய்துள்ளார் அது பின்வருமாறு : சின்னவர் என்று அழைக்க கூறிய அரசியல் வாரிசு உதயநிதி அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்.முதலாளித்துவ அரசியல் இன்றும் இருப்பது வேதனை.
உங்கள் பெயரின் முன்னால் திரு அல்லது பல மரியாதை நிமித்தமாக உள்ள தமிழ் வார்த்தைகள் போட்டு அழைப்பது இயல்பு.அதை விட்டுவிட்டு சின்னவர் என்றால் தங்களது குடும்ப அரசியலின் உச்சகட்ட அடிமைப்படுத்தும் எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது.
இப்படிப்பட்ட ஆசை உங்களை உண்மையிலேயே சிறியவராகத்தான் காட்டுகிறது. பாமக வில் நான் இருந்தபோது ஒரு முறை கூட சின்ன ஐயா என்று உச்சரித்தது இல்லை.அன்புமணி அண்ணன் என்றே கூறியுள்ளேன் என்பது குறிப்பிடத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.