24 special

இடஒதுக்கீடு ரத்து..! பீதியை கிளப்பும் பிஜேபி..!

telugana bjp
telugana bjp

தெலுங்கானா : தெலுங்கானா அரசியலில் தவிர்க்கமுடியாத இடத்தில் நிலைத்து நின்றுவருகிறது பிஜேபி. மேலும் தெலுங்கானா மாநில பிஜேபி தலைவராக பண்டி சஞ்சய்குமார் பதவியேற்றதிலிருந்து பிஜேபிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. கடந்த உள்ளாட்சித்தேர்தலில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தொகுதியிலேயே பிஜேபி தனது பலத்தை நிரூபித்திருந்தது.


இந்நிலையில் இந்துத்துவா சித்தாந்தத்தை கொண்டவரும் தேசிய சிந்தனையாளருமான கரீம் நகர் எம்பி பண்டி சஞ்சய்குமார் நேற்று கரீம்நகரில் நடந்த ஏக்தா யாத்திரை கூட்டத்தில் பேசுகையில் " தெலுங்கானாவில் பிஜேபி ஆட்சியமைக்கையில் சிறுபான்மையினர் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பட்டியலின சாதிகள் பழங்குடியினருக்கு அதிக சலுகைகள் கொடுக்கப்படும். இதனால் உயர்சாதியில் உள்ள ஏழைகளும் பயனடைவார்கள்.

லவ் ஜிகாத் எனும் பெயரில் எங்கள் சகோதரிகள் ஏமாற்றப்பட்டால் நாங்கள் அமைதியாக இருப்போமா. ஏழைகளை மூளைச்சலவை செய்து மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டால் ஹிந்து சமூகம் பொறுத்துக்கொள்ளாது. இந்த பண்டி சஞ்சயும் பொறுத்துக்கொள்ள மாட்டான். லவ்ஜிஹாத் என கூறுபவர்கள் போலீஸ் லத்தியின் சுவையை அறியச்செய்வோம்.

கட்டாயமாதமாற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம். நிஜாம் ஆட்சியின்போது ராசக்கர்களால் ஹிந்து சமுதாயத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து ராசாக்கர் பைல்ஸ் விரைவில் வெளியிடப்படும். வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதியை தோண்டி சிவலிங்கத்தை கண்டெடுத்தது போல  தெலுங்கானாவில் உள்ள மசூதிகளை ஆய்வுசெய்து இந்துக்களிடம் ஒப்படையுங்கள்.

நான் ஓவைஸிக்கு இதை சவாலாக சொல்கிறேன்.தெலுங்கானா மாநிலத்தில் பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் மதரஸாக்களுக்கு தடைவிதிக்கப்படும். உருதுமொழிக்கும் தடை விதிக்கப்படும். லவ் ஜிகாத் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வரும் மதரஸாக்கள் மீது நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும்" என பண்டி சஞ்சய் தெரிவித்துள்ளார்.