24 special

அண்ணாமலை என்ன "இப்படி கூறிவிட்டார்" கலக்கத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி!

Senthil balaji, annamalai
Senthil balaji, annamalai

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் கரூரில் இன்று மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்தார்.


மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் சிறையில் இருக்கிறார்கள் அதுபோல் செந்தில் பாலாஜியும் சிறை செல்வார், எந்த முதல்வர் வந்து செந்தில்பாலாஜியை காப்பாற்றுவார் என்று பார்ப்போம் என அண்ணாமலை சவால் விடுத்தார் அத்துடன் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற பிறகுதான் 6 வது கட்சிக்கு மாறுவார் எனவும் அண்ணாமலை குறிப்பிட்டார்.

இது குறித்து அண்ணாமலை பேசியதாவது, திமுக வினர் சுயலாபத்திற்காக மின்கட்டண உயர்வினை ஏற்றியுள்ளனர். கரூரை சார்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின்கட்டண உயர்வினை ஏற்படுத்தியுள்ளார்.

ஏன் மின் கட்டணம் உயர்வினை உயர்த்தினீர்கள் என்று கேட்டால், மோடி சொன்னாரு நாங்கள் செஞ்சோம் என கூறுகிறார். அதிகமாக பொய் சொல்லும் அமைச்சராக செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி வெளியிட வேண்டும். தமிழக மின்சார வாரியத்தின் கடனை குறைக்கவே மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கும்.

செந்தில்பாலாஜி நிச்சயம் சிறை செல்லுவார் அவரை யார் வந்து எந்த முதல்வர் வந்து காப்பாற்றுவார் என பார்ப்போம், கோபாலபுரத்திற்கு அதிகமாக வசூல் செய்து கொடுப்பதால் முதல்வர் செந்தில்பாலாஜியை பாராட்டுகிறார், விரைவில் செந்தில்பாலாஜி சிறைக்கு சென்றுவிட்டு அடுத்ததாக 6 வது கட்சிக்கு மாறுவார் எனவும் அண்ணாமலை பேசினார்.

அண்ணாமலை கரூர் மையத்தில் வைத்து கொண்டு செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என்று கூறியதும், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டு அமைச்சர்கள் கைது செய்யபட்டது போன்று செந்தில்பாலாஜியும் சிறைக்கு செல்வார் என அண்ணாமலை குறிப்பிட்டதை சற்று கலக்கமுடன் பார்கிறதாம் செந்தில் பாலாஜி தரப்பு.,

இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் கொல்கத்தாவை சேர்ந்த அமைச்சரை ஊழல் புகாரில் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கிறார்கள், இந்நிலையில் அண்ணாமலை தற்போது செந்தில் பாலாஜி சிறைக்கு செல்வார் என குறிப்பிட்டது ஒரு வகையில் நடந்து விடுமோ என்ற அச்சத்தை செந்தில்பாலாஜி தரப்பிற்கு உண்டாக்கி இருக்கிறதாம்.

இருப்பினும் ஊடகங்கள் அண்ணாமலையின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பினால் முகத்தில் பயத்தை  வெளிப்படுத்தாமல் அண்ணாமலை குற்றசாட்டை அப்படியே கடந்து விடலாம் எனவும் செந்தில்பாலாஜி தரப்பு முடிவு செய்து இருக்கிறார்களாம்.