24 special

சிவசேனாதிபதிக்கு சற்றுமுன் கிடைத்த பதிலடி ! இனி வாய் திறப்பாரா?

Annamalai,siva sena
Annamalai,siva sena

அண்ணாமலையை விமர்சனம் செய்த திமுகவை சேர்ந்த சிவசேனாதிபதிக்கு பிரபல அரசியல் விமர்சகர் சுந்தர்ராஜசோழன் பதிலடி கொடுத்துள்ளார், இது குறித்து அவர் தெரிவித்தது பின்வருமாறு :


கொங்கு வெள்ளாளரை OBC ஆக்கியது கருணாநிதி,ஆகையால் திராவிடத்தால் படித்தார் அண்ணாமலை என்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி மதிப்பெண்களை பற்றி எல்லாம் பேசாதே,நீ OBC என்றுதானே சான்றிதழ் வைத்துள்ளாய் அதை பேசு என்கிறார்..

நான் என்ன கேட்கிறேன்,சுதந்திர இந்தியாவில் OBC இட ஒதுக்கீட்டிற்கு கமிட்டி அமைத்து,சட்டத்திருத்தம் செய்தது பண்டிட் நேரு.இதற்கு நியாயமாக காரணகர்த்தாவாக காமராஜர் இருந்தார்.முதல் சட்டத்திருத்தத்தின் மூலவர் காமராஜர் என்று திரு.ஸ்டாலினே புகழ்ந்துள்ளார்.

OBC இடஒதுக்கீட்டை கொண்டு வந்த பிறகு 1952 ல் நடந்த முதல் நாடாளுமன்ற தேர்தலில் ஈவேரா என்ன செய்தார்?கழித்தொழிக்கப்பட வேண்டிய நச்சுப்பாம்பு காமராஜர் என்று, ஸ்ரீவில்லிப்புத்தூரில் அவருக்கு எதிராக ஜி.டி.நாயுடுவை நிறுத்தி பிரச்சாரம் செய்தார் ஈவேரா..இடஒதுக்கீட்டை கொண்டு வந்த காமராஜரை 'நச்சுப்பாம்பு' என்று வர்ணித்த ஈவேராவும்,அதன் தொண்டர்களும் சமூகநீதி போராளிகளா?

OBC இடஒதுக்கீட்டிற்கு சட்டத்திருத்தம் கொண்டு வந்து தரவில்லை என்றால் எப்படி பின்னாளில் நாடார்,கொங்கு வெள்ளாளரை BC பட்டியலில் சேர்த்திருக்க முடியும்? அப்படியானால் சுதந்திர இந்தியாவில் இட ஒதுக்கீடு பெரும் எல்லோருமே விஸ்வாசமாக இருக்க வேண்டியது நேரு,அம்பேத்கர்,காமராஜருக்குத்தான்..

அதே சமயம் மண்டல் கமிஷனை அறிமுகப்படுத்திய போது ராஜிவ்காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது என்ன? அவர் மண்டலை ஏற்றாரா?" பிராமணர்,ரெட்டி,கம்மா,ஒக்கலிகா, லிங்காயத்,கவுண்டரை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்திருப்பது  நியாயமா?" என்று ராஜிவ்காந்தி முழங்கினார்.

அதுமட்டுமல்ல 2018 ல் தேசிய பிற்படுத்தப்பட்டோர்(OBC) ஆணையத்தை பாஜக கொண்டு வரும் போது,அந்த மசோதாவை எதிர்த்து வாக்களித்த கட்சி காங்கிரஸ்.இதைப்பற்றி காங்கிரஸிடம் கேள்வி கேட்க தயாராக உள்ளதா திமுக? 

1980 களில் OBC ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உருவம் கொடுத்த கட்சி மோடி தலைமையிலான பாஜக.ஆனால் 10 வருடம் காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு ஆண்டும் அதை கொண்டு வரவில்லை,பாஜக கொண்டு வருகிற போதும் அதை எதிர்த்த காங்கிரஸ்ஸோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஏன் சமூகநீதி வேஷம் போடுகிறது திமுக? நிற்க.

சுந்திர இந்தியாவில் இடஒதுக்கீட்டை கொடுத்தது நேரு காங்கிரஸ்,OBC இடஒதுக்கீட்டை 50% மாற்றியது எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக.மண்டல் கமிஷனை வி.பி.சிங் கொண்டு வந்தது,பாஜக ஆதரவுபெற்ற கூட்டணி அரசில்,69% இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு கொடுத்தது ஜெயலலிதா - நரசிம்மராவ் கூட்டணி.இன்று OBC ஆணையத்தை கொண்டு வந்ததும்,மருத்துவத்துறையில் 27%த்தை உறுதிப்படுத்தியதும் மோடி தலைமையிலான பாஜக அரசு..

ஆனால்,கொங்கு வெள்ளாளர் எப்படி OBC ஆவார்கள் என்று கேள்வி கேட்ட ராஜிவ்காந்தியையும்,OBC ஆணையத்தை எதிர்த்த அவரது வாரிசு ராகுல்காந்தியையும் ஆதரித்துக் கொண்டு கார்த்திகேய சிவசேனாதிபதி சமூகநீதியை பற்றி புருடா விட்டுக் கொண்டிருக்கிறார்,இந்திய அளவிலான தகுதித்தேர்வுகளை எதிர்கொள்வதில் தமிழர்கள் இன்று சந்திக்கும் இன்னலுக்கு காரணமே,திராவிட கருத்தியல் தரும் உளவியல் நெருக்கடிதான்.

எல்லோரையும் கோபாலபுர வாசலில் கைகட்டி நிற்க வைக்க வேண்டும்..சாதித்த தமிழனெல்லாம் அந்த குடும்பத்தாலே வந்தவன் என்று ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்கிற கீழ்த்தரமான அரசியலால் தமிழகத்தின் அடிப்படை உளவியலே வீழ்கிறது, 

திரு.அண்ணாமலை மெரிட்டில் IPS பாஸ் செய்தவர்..காசைக் கொட்டிக் கொடுத்தாலும் இந்த திராவிட பண்ணையார்களால் நுழைய முடியாத கல்லூரிகளில் பயின்று,இவர்களால் வெல்ல முடியாத தேர்வினை வென்று அதிகாரத்தை அடைந்தவர்.அந்த அதிகாரத்தை தூக்கிப் போட்டுவிட்டு நம் மக்களுக்கு பணி செய்வதே சிறந்தது என்ற அவாவில் அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.

இவர்களுக்கு இப்படிப்பட்ட தகுதி வாய்ந்த தமிழர் பிம்பம் கண்ணை உறுத்துகிறது.அதெப்படி கோபாலபுர வாசலில் மண்டியிடாத ஒருவன் இருக்கலாம் என பதறி ஸ்டிக்கர் ஒட்டும் வேலையில் இறங்கியுள்ளது.ஆனால் மக்கள் விழித்துக் கொண்டார்கள்,இனி இவர்களின் அரசியல் எடுபடாது என குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்.