ஸ்ரீமதி மரணம் தொடர்பான கலவரம் மிக பெரிய கரும்புள்ளியை தமிழக காவல்துறைக்கு உண்டாக்கியது, உளவுதுறையின் பெரும் தோல்வியாக கள்ளக்குறிச்சி கலவரம் பார்க்கப்படுகிறது, இந்த சூழலில் கலவரத்திற்கு காரணமான நபர்களை கண்டறிய அதிரடி நடவடிக்கையில் தமிழக காவல்துறை இறங்கியுள்ளது.
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக உளவு அமைப்புகள் கண்டறிந்து இருப்பதாக ஆங்கில நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது, இதனை சுட்டிக்காட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றை கொடுத்துள்ளார் அதில்,
மாணவி ஸ்ரீமதி கொல்லப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதிலிருந்து திசை திருப்பி பள்ளியைத் தாக்கியது யார்? கொளுத்தியது யார்? என்று விவாதத்தை மடைமாற்றிவிட்டு மாணவியின் குடும்பத்திற்கு எதிராகச் சிலர் திட்டமிட்டே செயல்பட்டு வருகின்றனர். அந்தச் சதிக்கும்பலுக்குத் துணைபோகும் வகையில் தற்போது உளவுத்துறையின் நடவடிக்கைகளும் அமைவதாக உள்ளது.
கீழுள்ள ஆங்கில நாளேட்டுச் செய்தி உள்நோக்கத்துடன் கூடியதாக உள்ளது. உளவுத் துறையிலுள்ள சாதிய வாதிகளின் சதியாகவே தெரிகிறது. இம்மாதிரியான தகவலை ஊடகத்திற்கு அளித்த உளவுத்துறையினர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசுக்கு அளித்த இரகசிய தகவல்களை ஊடகத்தில் கசியவிடுவது ஏன்? இத்தகவலே தவறானது.
இது ஆதிதிராவிடர் மற்றும் விசிகவுக்கு எதிரான அரசியல் சதியாகும். பள்ளியைக் கொளுத்தியதும் ஆதி திராவிடருக்கெதிராக சாதிய வன்மத்தைக் கக்குவதும் ஸ்ரீமதியின் சாவுக்குக் காரணமானவர்களே என்பதை அறியமுடிகிறது எனவும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார். மொத்தத்தில் கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக பல்வேறு கட்சியை சேர்ந்த நபர்கள் கைது செய்யப்படலாம் எனவும் முதற்கட்ட விசாரணையில் விசிக நிர்வாகிகள் பலர் சிக்கி இருப்பதாக பேசப்படும் தகவலால் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறது விசிக தரப்பு.ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.