பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பல்வேறு கருத்துக்களை முன் வைத்து பேசினார். அப்போது, திமுக விற்கான 6 மாத கால ஹனிமூன் பீரியட் முடிந்து விட்டது. இனிமேல் அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயத்திற்கும் நாங்கள் கண்டிப்பாக தீவிரமாக ரியாக்ட் செய்வோம்.பெட்ரோல் டீசல் விலை உயர்வு மிகப் பெரிதாகப் பேசப்படுகிறது. ஆனால் இதில் இருக்கக்கூடிய அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளுதல் வேண்டும். ரஷ்யா-உக்ரைன் போர் நடந்துக்கொண்டிருப்பதால் நமக்கு கிடைக்கக்கூடிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயர காரணமாக இருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து இருக்கின்றது. இதைப்பற்றி எல்லாம் பேசாமல் எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குற்றம் சொல்வது சரியானது அல்ல. பெட்ரோல் டீசல் விலையை மிகப்பெரியதாக பேசும்போது, சொத்து வரி உயர்வு குறித்தும் மிகப்பெரிதாக பேச வேண்டும் அல்லவா? மத்திய அரசு சொல்லிதான் சொத்து வரி உயர்த்தப்பட்டு இருக்கிறது என்றால் மத்திய அரசு சொல்லித்தான் மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருவதை திமுக சொல்லியிருக்க வேண்டும். அதையெல்லாம் சொல்லாமல் இப்படி மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது திமுக.
இதே போன்று டோல்கேட்டில் கட்டணம் உயர்வு என பேசும் போது, அதில் மாநில அரசுக்கு உண்டான பங்கு பற்றி யாரும் வாய் திறப்பதே கிடையாது. அதாவது மாநில அரசுக்கு வருமானம் வரக்கூடிய இடம் என்றால் சற்று சைலண்டாக மத்திய அரசுக்கு லெட்டர் மட்டும் போட்டு கண்துடைப்பு செய்வதும், மற்ற ஏதாவது விஷயம் என்றால் ஓங்கி குரல் கொடுப்பதும் திமுகவிற்கு இருக்கும் ஒரு வழக்கம் என மிக பகிரங்கமாக பேசியிருக்கிறார் நடிகை குஷ்பூ. நடிகை குஷ்புவின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அதே வேளையில் விவரமறிந்தவர்கள் இந்தியாவை பொறுத்தவரையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு என்ன காரணம் என அறிந்து இருக்கின்றனர்.
விவரம் அறியாதவர்கள் செய்தித்தாள்களிலும் ஊடகங்களிலும் பெட்ரோல் டீசல் உயர்வுக்கு மத்திய அரசு மட்டுமே காரணம் என சுட்டிக் காட்டி வருவதால் மக்களுக்கு உண்மையான விஷயங்களை தெரிந்து கொள்வதில் சற்றுக் குழப்பம் நிலவுவது அனைவராலும் பார்க்கப்படுகிறது. ஆனால் உலக அளவில் இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் காரணமாக தான் தற்போது அனைத்து நாடுகளிலும் பெட்ரோல்-டீசல் விலை அதிகரித்து வருகின்றது என்ற உண்மை மெல்ல மெல்ல மக்களால் புரிந்து கொள்ளப்படும் என்று உணரலாம்.