24 special

"நாளை வெளுத்து வாங்குறேன் இருங்க"....டாக்டர் கிருஷ்ணசாமி அதிரடி...!

Dr. krishnasamy
Dr. krishnasamy

ஆளும் திமுக ஆட்சி குறித்தும், உயர்த்தப்பட்ட சொத்து வரி குறித்து கண்டனம் தெரிவித்து மாநிலம்  முழுவதும் புதிய தமிழகம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த டாக்டர்.கிருஷ்ணசாமி பல்வேறு கருத்துக்களை முன் வைத்து உள்ளார். அதில், 


கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாவின் கடும் தாக்கம் காரணமாக முழு முடக்கத்தில் இருந்து இப்போது தான் கல்வி நிறுவனங்களும்,தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும், கல்வி நிறுவனங்களும் மெல்ல மெல்ல தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன. இந்த சூழலில் திடீரென்று தமிழ்நாடு அரசு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள், சிறு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்திற்கும் 100 முதல் 200 சதவீதம் வரை சொத்து வரி உயர்வை அறிவித்து இருக்கிறது.


தமிழக அரசினுடைய இந்த அரசாணை எந்தவிதத்திலும் ஜனநாயக பூர்வமானதோ நியாமானதோ அல்ல. ஏற்கனவே தமிழகத்தில் இருக்கக்கூடிய மக்கள் கடந்த 2 ஆண்டு காலமாக பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகி இருக்கக்க்கூடிய இந்த வேளையில், வீட்டு வரியும், தொழில் நிறுவனங்களுக்கான வரியும் உயர்ந்து வணிகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான வரியையும் உயர்த்தி உள்ளனர். இது மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக முடியும். எனவே தமிழக அரசின் இந்த அரசாணை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது திரும்ப பெற வேண்டும் என புதிய தமிழகம் கட்சி சார்பாக தமிழ்நாடு முழுவதும் அனைத்து நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி யில் காலை முதல் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

தற்போது சென்னையில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாநில அரசு, இந்த நகர்ப்புற சொத்துவரி உயர்வுக்கு மத்திய அரசின் நிதி குழு எங்களுக்கு அழுத்தம் கொடுத்ததால்தான் சொத்து வரியை உயர்த்தினோம் என சொல்கிறார்கள். மத்திய அரசு சொத்து வரியை உயர்த்த அழுத்தம் கொடுக்க மாட்டார்கள். அப்படியே கொடுத்திருந்தாலும் கூட இவர்கள் என்ன செய்து இருக்க வேண்டும் தமிழக மக்களின் நலன் கருதி நாங்கள் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என குறிப்பிட்டு இருக்க வேண்டும். ஆனால் இவர்களுக்கு சாதகமாக சொத்து வரியை உயர்த்தி விட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம்சாட்ட கூடாது. இது தான் என்னுடைய வேண்டுகோள்.

ஏற்கனவே திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக கடந்த ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தேர்தல் வாக்குறுதியில் நாங்கள் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என குறிப்பிட்டிருக்கின்றனர். பல வாக்குறுதிகளை ஏற்கனவே காப்பாற்றவில்லை.அதற்கு மாறாக இப்போது சொத்து வரியை உயர்த்தி இருக்கின்றனர்.

எனவே இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறோம். சொத்து வரியை ரத்து செய்யவில்லை என்றால் இன்னும் கூடுதலான போராட்டம் நாங்கள் செய்வோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதை எல்லாம் தாண்டி, எதன் அடிப்படையில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது என்பது குறித்த ரேஷியோவே இவர்கள் சொல்லவில்லை என திமுக ஆட்சி குறித்து, தன்னுடைய விமர்சனத்தை வைத்து உள்ளார் புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி. 

தொடர்ந்து பேசிய அவர், நாளை இது குறித்து விவரமாக பேசுகிறேன் என சற்று வீரியமாக தெரிவித்துக்கொண்டார். எனவே சொத்து வரி உயர்வுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பாக போராட்டம் வலுப்பெறுமா என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.