24 special

"நேரத்தை சொல்லுங்கள் நான் சொல்கிறேன்" சுளிர் பதிலடி கொடுத்த கார்த்தி சிதம்பரம் !

Senthilkumar, karthi chidambaram
Senthilkumar, karthi chidambaram

தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இந்து முறைபடி நடந்த அரசு நிகழ்ச்சியின் பூமி பூஜை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தியது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது, பெரியாரிஸ்ட்கள், சிறுபான்மை அமைப்பை சேர்ந்த சிலர் செந்திலுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.


இது ஒருபுறம் என்றால் திமுக தலைமை செந்திலின் நடவடிக்கையை விரும்பவில்லை என்றும் அவரை அமைதியாக இருக்க கூறியதாகவும் கூறப்படுகிறது,2024 நாடாளுமன்ற பொது தேர்தலின் போது செந்திலுக்கு நிச்சயம் சீட் கிடைக்காது என்றும் உறுதியாக கூறுகின்றன அறிவாலயம் வட்டாரங்கள்.

இது ஒருபுறம் என்றால் தமிழகத்தை சேர்ந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் சக கூட்டணி கட்சி எம்.பி செந்திலின் செயல் தேவையில்லாத வேலை எனவும் விமர்சனம் செய்துள்ளார் அத்துடன் தலைவர்கள் முதல் பலர் நல்ல நேரம் பார்த்தே பதவி ஏற்பார்கள், நேரத்தை நீங்கள் சொல்லுங்கள் நான் சொல்கிறேன் எனவும் சவால் விடுத்துள்ளார் கார்த்தி.இதுகுறித்து ட்விட்டரில் கார்த்தி தெரிவித்தது பின்வருமாறு :  முற்றிலும் தேவையற்ற செயல். உண்மையை சொல்லுங்கள்..

இது போன்ற நிகழ்வுகள் இல்லாமல் உங்கள் கட்சி உறுப்பினர் ஒருவரின் இல்லத்தில் திருமணம், புதுமனை புகுவிழா நடந்துள்ளதா?

மக்கள் தங்களுக்கு வாக்களிப்பதால் அனைத்து வகையான சடங்குகளையும் மறுப்பதாக திராவிட தலைவர்கள் நினைக்கிறார்கள்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் "ஒவ்வொரு பதவிப் பிரமாண நிகழ்ச்சியும் அல்லது பதவியேற்பு விழாவும் அரசாங்க நிகழ்வு தான். நீங்கள் நேரத்தை சொல்லுங்கள்..அந்த நேரம் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்." என கூறியுள்ளார்.

அதாவது நல்ல நேரம் பார்த்துதான் அரசு நிகழ்ச்சிகளோ, பதவியேற்பு நிகழ்ச்சிகளோ நடந்துள்ளது எனவும் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார், மொத்தத்தில் பாஜக தொடர்ந்து இந்து மதத்திற்கு எதிரான கட்சி திமுக என குற்றம் சுமத்தி வரும் சூழலில் தற்போது செந்திலின் நடவடிக்கை சாமானிய மக்களையும் பாஜக கூறியது உண்மைதானோ என்று எண்ணும் வகையில் அமைந்துவிட்டது.