24 special

அமெரிக்க பெண் தலைவர் போட்ட போடு... இந்தியாவுக்கு பறந்த போன் கால்..கெஞ்சும் டிரம்ப் .. இது தான் மோடி

MKSTALIN,DONALDTRUMP
MKSTALIN,DONALDTRUMP

சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்திருந்தது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்நிலையில், இன்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திடீரென பிரதமர் மோடியை தொலைபேசியில் அழைத்து உரையாடியிருக்கிறார். மோடியை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் நெதன்யாகு கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மோடி நேதன்யாகு சந்திப்பில் தீவிரவாத தடுப்பு, இந்தியாவில் இஸ்ரேலிய ராணுவ உற்பத்தி என தொடங்கி பல விஷயம் இருந்தாலும் துருக்கி மற்றும் பாகிஸ்தானை  போட்டு பொளக்கும்  என பல திட்டங்கள்  இருக்கலாம் என உலக அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதனால்  நேதன்யாகு மோடி சந்திப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. மேலும் அமெரிக்கவிடம் நெருக்கம் காட்டி வரும் நாடுகள் ஒவ்வொன்றும் இந்தியா பக்கம் சாய்ந்து வருகிறது. இதனால் அமெரிக்காவில் பெரும் அரசியல் குழப்பமே ஏற்பட்டுள்ளது. 


அமெரிக்கா–இந்தியா குவாட் அமைப்பு , உருவாக்கி  இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பான சூழலை கொண்டுவர அமெரிக்கா மற்றும் இந்தியா இணைந்து செயல்பட்டது. அனைத்தும் வலுவாக இருந்த நிலையில், டிரம்ப் அதை சுக்கு நூறாக உடைத்துவிட்டார்.  பதவியேற்ற சில மாதங்களில் இரு நாடுகளின் உறவு  தலைகீழானது. 

இது குறித்து அமெரிக்க பெண் தலைவர் சிட்னி கமால்கர், ட்ரம்ப்பை பொளந்து காட்டியுள்ளார்.  இந்தியாவுடன் பல தசாப்தங்களாக கட்டியெழுப்பிய உறவை, டிரம்ப் தனது தனிப்பட்ட நோபல் பரிசு ஆசைக்காக தகர்த்துவிட்டார் என . பாக்கிஸ்தான் போன்ற வீழ்ந்து கிடக்கும் நாட்டுடன் கூட்டுச் சேர்ந்து, இந்தியாவை எதிரியாக வைத்துக்கொண்டு அரசியல் லாபம் தேடுவது, அமெரிக்காவின் தேசிய நலன்களையே துரோகப்படுத்தும் செயல். இந்தியா மீது 50% வரி விதித்தது, எந்த தேசத்துக்கும் விதிக்கப்படாத அளவுக்கு கடுமையானது. இது இந்தியா–அமெரிக்கா இடையேயான தலைவர்மட்ட சந்திப்புகளையும், தொழில் பாராட்டுக்களையும், மக்கள்-மக்கள் தொடர்புகளையும் தடம் புரளச் செய்திருக்கிறது.

இதோடு H-1B விசா கட்டணத்தை 100,000 டாலராக உயர்த்திய முடிவு, அமெரிக்க அறிவியல், மருத்துவம், தொழில்நுட்ப துறைகளை தாங்கிக் கொண்டிருக்கும் இந்திய நிபுணர்களுக்கு பெரிய அவமதிப்பாக உள்ளது எனவும். “நம் முகத்தைப் பார்த்துக்கொண்டு நம் மூக்கை வெட்டுவது போன்ற முடிவுகள் இவை,” என்று டிரம்ப் நிர்வாகம் மீதுகுற்றசாட்டுகளை அடுக்கினார். இந்தியாவின் நெருங்கிய கூட்டாண்மையை தகர்ப்பது, அமெரிக்காவின் உலகளாவிய செல்வாக்கையே இழிவுபடுத்தும் செயல் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும், ரஷ்யாவுக்கு மறைமுக பலம் சேர்க்கும் வகையில் டிரம்ப் எடுத்த நடவடிக்கைகளும், அட்லாண்டிக் கூட்டணிகளை பலவீனப்படுத்தும் முடிவுகளும், லத்தீன் அமெரிக்காவில் உருவான அசாதாரண கலக்கங்களும் அதிபராக யாரும் பெருமையாக நினைக்கக்கூடிய மரபாக இல்லை . டிரம்ப் தனிப்பட்ட வெறி மற்றும் நோபல் ஆசை மட்டுமே இதற்கு எல்லாம் காரணம் என்று கமால்கர்கூறியுள்ளது அமெரிக்காவை புரட்டி போட்டுள்ளது. .

இது டிரம்புக்கு இன்னொரு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் இன்று திடீரென்று டொனால்ட் டிரம்ப் - பிரதமர் மோடி ஆகியோர் தொலைபேசியில் பேசி உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையின்போது இருவரும் இருநாட்டு வர்த்தக உறவு பற்றி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.