24 special

நீங்க பார்த்த இந்தியா இப்போ இல்ல! உலகத்தை அதிரவைக்கும் புதிய சக்தி!அமெரிக்க நிபுணர் அதிரடி

PMMODI,RICHARDWOLFF
PMMODI,RICHARDWOLFF

இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் ஆம்ஹெர்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறை பேராசிரியர் ரிச்சர்ட் வுல்ப் (83). அமெரிக்காவின் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரான அவர், ரஷ்யா டுடே தொலைக்காட்சி சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:


ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. சர்வதேச அளவில் இந்த 7 நாடுகளின் பொருளாதாரம் 28 சதவீதமாக உள்ளது. அதேநேரம் ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய 10 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸின் பொருளாதாரம் 35 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. உலகின் பொருளாதார மையமாக பிரிக்ஸ் உருவெடுத்திருக்கிறது.

அமெரிக்காவின் நடவடிக்கைகளால் பிரிக்ஸ் கூட்டமைப்பு நாளுக்கு நாள் வலுவடைந்து கொண்டே செல்கிறது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது ஆகும். இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடிப்பதன் மூலம் அமெரிக்கா தனது காலில் தானே சுட்டுக் கொண்டிருக்கிறது.

மத்திய கிழக்கில் உள்ள சிறிய நாடுகளான சிரியா, லெபனானோடு அமெரிக்காவால் மோத முடியும். இதுபோன்ற சிறிய நாடுகளுடன் மோதுவதால் அமெரிக்காவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இதே அணுகுமுறையை இந்தியாவுடன் கடைபிடிக்க முடியாது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது.

ஆரம்ப காலம் முதலே இந்தியா, ரஷ்யா இடையே ஆழமான நட்புறவு நீடிக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைகளால் இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு மேலும் வலுவடைந்து வருகிறது. மேற்கத்திய நாடுகளுக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தவறுகள் வரலாற்றில் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இவர் கூறியதுக்கு ஏற்பது போல் BRICS நாடுகளுடனான வர்த்தகத்தை 100% இந்திய ரூபாயில் மேற்கொள்வதற்கான பணிகளை  இந்தியா தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக, ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்ட புதிய அறிவிப்பின்படி, வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க வங்கிகளுக்கு முன்அனுமதி தேவையில்லை. இனி, வெளிநாட்டு ஏற்றுமதியாளர்களும் இறக்குமதியாளர்களும் இந்திய ரூபாயைப் பயன்படுத்தி சிறப்பு வோஸ்ட்ரோ கணக்குகள் மூலம் வர்த்தக செட்டில்மென்டுகளை மேற்கொள்ளலாம்.

இந்தியா ரூபாயை அமெரிக்க டாலருக்கு போட்டியாகப் பயன்படுத்தும் நிலையில், மற்ற BRICS உறுப்பு நாடுகளும் சர்வதேச வர்த்தகத்தில் தங்கள் உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன.

இதன் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ தங்கள் நாணயத்தை அமெரிக்க டாலராக மாற்ற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக தங்கள் வோஸ்ட்ரோ கணக்கில் உள்ள இந்திய ரூபாயைப் பயன்படுத்தலாம். இது வர்த்தகச் செயல்பாடுகளை எளிதாக்குகிறது.