தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஒரு வருடம் ஆக போகிறது, கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றார் இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலினின் ஓராண்டு ஆட்சியை கொண்டாடும் விதமாக மாவட்டம் தோறும் கூட்டம் மற்றும் நிகழ்ச்சி நிரல்களை அக்கட்சி ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும் அரசு விழாக்கள் நடத்தவும் தயாராகி வருகிறது அரசு. இந்த சூழலில் மகாராஷ்டிரா மற்றும் டெல்லியை தலைமையிடமாக கொண்ட இரண்டு ஆங்கில சேனல்கள் சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளன அதில் தமிழகத்தில் திமுக ஆட்சி குறித்து கேள்வி எழுப்பபட்டுள்ளது.
மொத்தம் 15 முதல் 20 கேள்விகள் வரை கேட்கப்பட்டு இந்த சர்வே தயார் செய்யப்பட்டுள்ளது.செல்போன் மூலமாகவும், நேரிலும் கருத்துக்கள் கேட்கப்பட்டு முடிவுகள் சேகரிக்கபட்டுள்ளன, இதில் ஒரு வருட திமுக ஆட்சி கடும் பின்னடைவை மக்கள் மத்தியில் சம்பாரித்து இருப்பது தெரியவந்துள்ளது.திமுக., ஆட்சிக்கு வந்த பின் ரவுடியிசம் தலை துாக்கிஉள்ளது.
சட்டம் - ஒழுங்கு சரியில்லை; திமுகவினர் அராஜக செயல்களில் ஈடுபடுகின்றனர். கோவில்களை இடிப்பதில் இந்த அரசு ஏன் அதிக அக்கறை காட்டுகிறது.
என சர்வே முடிவுகள் தெரிவிக்கிறதாம்.இப்படியே போனால், 2024 லோக்சபா தேர்தலில் 10 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த சர்வே முடிவுகள் திமுகவிற்கும் திமுகவிற்கும் தெரியவந்துள்ளதாம், இதனால் இதனை எவ்வாறு கையாளுவது என்று ஆழ்ந்த யோசனையில் இருக்கிறதாம் திமுக தலைமை. தொடர்ந்து சட்டம் ஒழுங்கை சரி செய்ய முதல்வர் ஸ்டாலின், தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவிற்கு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.