
பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளார். அதற்கு முன்பாகவே, டெல்லியில் நடந்த இந்தியா–சீனா முக்கிய சந்திப்பு, சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ நேற்று டெல்லி வந்தார். அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நீண்ட நேர ஆலோசனையில் ஈடுபட்டார். இது, 2020 கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு இரு நாடுகளும் உறவில் காட்டும் மிகப்பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.
2020 ஜூன் மாதத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்தியா–சீனா இடையே நடந்த எஎல்லை சண்டை இரு நாடுகளின் உறவையே நொறுக்கியது. அதன் பிறகு 20க்கும் மேற்பட்ட இராணுவ–தூதரக அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, டெல்லி வந்துகொண்டு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருடன் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். இது 24வது சுற்று இருதரப்பு பேச்சுவார்த்தையாகும், கடந்த கசான் மாநாட்டில் மோடி – ஜி ஜின் பிங் சந்திப்புக்குப் பிறகு, இருதரப்பிலும் நடந்த மிக முக்கிய முன்னேற்றமாகும்“எல்லையில் அமைதி இருந்தால்தான் இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்ள முடியும். இல்லையெனில் எந்த உறவும் நிலையானதாக இருக்காது என்பதை தெளிவாக சீனாவிடம் கூறிவிட்டார் மேலும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமர் மோடியை சந்தித்தார் என்பதும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், ஜெய்சங்கர் – வாங் யீ சந்திப்பு, எல்லை பிரச்சனையை சமாளிக்க “மூன்று பரஸ்பர அம்சங்கள்” என்ற வழிகாட்டுதலை மையமாகக் கொண்டது. அதாவது பரஸ்பர மரியாதை, பரஸ்பர நலன், பரஸ்பர உணர்வு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உறவை மேம்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது. கருத்து வேறுபாடுகள், சர்ச்சையாகவோ போட்டியாகவோ மாறக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.இந்தியாவுடன் உறவை மேம்படுத்தும் முயற்சியாக, சீனா ஏற்றுமதி தடையை நீக்கியுள்ளது.
இதன் மூலம்,இந்திய விவசாயத்துக்குத் தேவையான 30% உரங்கள்,மின்னணு மற்றும் வாகன உதிரிப் பாகங்களுக்கு அத்தியாவசியமான அரிய மண் தாதுக்கள்,நகர்ப்புற மற்றும் சாலை மேம்பாட்டுக்கான சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் போன்றவை இனி எந்தத் தடையும் இன்றி இந்தியாவுக்குக் கிடைக்கும் என்று வாங் யீ உறுதி செய்துள்ளார். ஏற்கெனவே ஏற்றுமதி ஆரம்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா 50% வரி விதிப்பு என கடுமையான நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், சீனாவின் இந்த நெருக்கம், உலக அரங்கில் புதிய சதுரங்க பலகையை உருவாக்குகிறது.ஏற்கனவே இந்தியாவின் உற்ற கூட்டாளியான ரஷ்யா, இப்போது சீனாவும் இந்தியாவுடன் நெருங்கி வருவது, அமெரிக்காவுக்கு பெரும் அரசியல் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வாங் யீ – ஜெய்சங்கர் சந்திப்பில், “ஆசியா மற்றும் உலகின் முன்னேற்றத்திற்கு இந்தியா – சீனா இணைந்து பங்களிக்க முடியும்” எனக் கூறிய சீனா, தன்னுடைய நிலைப்பாட்டில் நெகிழ்ச்சி காட்டியுள்ளது. பிரதமர் மோடி விரைவில் சீனாவுக்குச் செல்ல இருக்கின்றார். அப்போது மோடி – ஜி ஜின் பிங் சந்திப்பு, இந்த உறவுகளை இன்னும் உயர்த்துமா? இல்லையா என்பது உலக நாடுகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன.
சர்வதேச அரசியலில் சதுரங்கம் உலக அரசியல் இன்று அமெரிக்கா vs சீனா–ரஷ்யா என்ற போட்டியிலேயே திகழ்கிறது. ரஷ்யா ஏற்கனவே இந்தியாவின் நெருங்கிய கூட்டாளி.இப்போது சீனாவும் மெதுவாக இந்தியாவுக்கு சாய ஆரம்பித்துள்ளது.இதனால், அமெரிக்கா இந்தியாவை தனது பக்கம் வைத்துக் கொள்ள அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. இந்தியா–சீனா இணைந்தால் ஆசியாவின் மட்டுமல்ல, உலகத்தின் எதிர்காலம் மாறும்”என்று திறந்தவெளியில் கூறியிருப்பது, உலக அரங்கில் புதிய அதிகார சமநிலையை குறிக்கிறது.