24 special

ஒன்றிணைந்த இந்துக்கள்... கேரளாவை புரட்டி போட்ட சம்பவம்.. அடுத்து தமிழகத்தில் தான்... தலையில் கை வைத்த அறிவாலயம்

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

தற்போது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது கேரள உள்ளாட்சி தேர்தல். குறிப்பாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி  திருவனந்தபுரம் மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் 26 கிராமப் பஞ்சாயத்துகளில் வெற்றி பெற்றுள்ளது.


இதில், திருவனந்தபுரம் வெற்றி கேரளாவைத் தாண்டி பேசு பொருளாகியுள்ளது. பாஜகவும் அதை ஏதோ மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு நிகராகக் கொண்டாடி தீர்த்து வருகிறார்கள் இதற்குகாரணம் இருக்கிறது. கடந்த 45 ஆண்​டு​களாக திரு​வனந்​த​புரம் மாநகராட்சி மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணி​யின் கோட்​டை​யாக இருந்​தது. முதல் ​முறை​யாக இந்த மாநக​ராட்​சியை பாஜக கைப்​பற்றி புதிய வரலாறு படைத்​திருக்கிறது. இதை கேரளாவில் அடுத்தடுத்த வெற்றிக்கான கணக்கின் தொடக்கமாக பாஜக பார்க்கிறது,.கேரள உள்​ளாட்​சித் தேர்​தலில் ஆளும் மார்க்​சிஸ்ட் கட்சிக்கு பெரும் பின்​னடைவு ஏற்​பட்​டது. காங்​கிரஸ் தலைமையி​லான கூட்​டணி வெற்றி பெற்​றது. அதே​போல் பாஜக தலை​மையி​லான என்டிஏ கூட்​ட​ணி​யும் கணிச​மான இடங்களைக் கைப்​பற்றி உள்​ளது.

இதற்கிடையில்  திருவனந்தபுரத்தில் இந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னால் பல வியூகங்கள் இருக்காலாம் என யோசிக்கலாம். இதில் அரசியல் கட்சிகள் செய்யும் அதே யுகங்களை தான் பாஜகவும் கையாண்டது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மூலம் மக்களுக்கு சென்ற  ஆன்லைன் பிரச்சாரங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 34 வார்டுகளில் வென்ற பாஜக, இத்தேர்தலில் 50 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது. தனது பிரச்சாரத்தில் பாஜக கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகள்  ஊழலின் கூடாரம் என்று விமர்சிப்பதை மிக முக்கிய அஸ்திரமாகக் கையில் எடுத்திருந்தது.மக்களிடையே கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் மீது அதிருப்தி இருந்த நிலையில் ஊழல் பிரச்சாரம் வெற்றியை பெற்று தந்தது. உள்ளாட்சி அமைப்புகளிடம் சேவை குறைபாடு மற்றும் செயல்திறன் குறைபாட்டை மக்களிடம் விரிவாக எடுத்துரைத்தது.இவை திருவனந்தபுரத்தில் பாஜக வெற்றிக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்றாகப் பார்க்கப்படுவதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். 

இதை விடவும் ஒரு நுணுக்கமான பிரச்சார உத்தியும் கவனிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தெற்கு மற்றும் மத்திய கேரளாவில் கவனம் செலுத்தியது. இந்தப் பகுதிகள் இந்துக்கள் வாக்கு பலம் கொண்டது. தனது பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் உள்ள உள்ளாட்சிகளுக்கு என்று திட்டமிட்டு செயல்படுத்தினாலும் கூட அதன் வீச்சு, கவனக் குவிப்பு இந்துக்கள் வாக்கு பலம் கொண்ட தெற்கு, மத்திய கேரளாவில் அதிகமாக இருந்துள்ளது. 

பாஜகவின் உத்திகள் இந்து வாக்குகள் அதிகமுள்ள திருவனந்தபுரத்தில் ஒர்க் அவுட் ஆனது போல் பாலக்காடு, திருச்சூரிலும் கணிசமாக நகர்ப்புற இந்துக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் சுரேஷ் கோபி திருச்சூரில் இருந்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குதான் உண்மையில் பிரதமர் சொல்வது போல் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்  மீது  மக்கள் சலிப்படைந்துவிட்டனரோ என்பது சரிதானோ என்ற கருத்தை பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.  சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகர் சிலைகளின் தங்க கவசம், கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தங்கத் தகடு ஆகியவற்றில் இருந்து தங்கம் திருடு போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இஸ்லாமிய சமூகம் மற்றும் கிருஸ்துவர்கள் வாழும் பகுதிகளிலும் பாஜக வாக்கு வங்கியை அதிகப்படுத்தியுள்ளது காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.  இந்துக்களின் ஓட்டுக்களை ஒருங்கிணைத்து பாஜகவுக்கு போட வைத்தது காங்கிரஸ் தான். அதே போல் தமிழகத்திலும் திருப்பரங்குன்றம் விஷயத்தில் அந்த வேலையை திமுக அரசு செய்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள் இது உளவுத்துறையும் ரிப்போர்ட் கொடுத்துள்ளதாம்.