24 special

எது அமைச்சர் பதவிக்கு ஆபத்தா? நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு செய்த காரியம்...!

udhayanithi
udhayanithi

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக அமைச்சர் உதயநிதிக்கு நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்து வருகிறது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டில் உதயநிதி பேசும் பொழுது சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது இன்று I.N.D.I.A  கூட்டணியில் இருந்து திமுகவை சற்று ஒதுக்கி வைப்பதற்கும், உதயநிதியின் அமைச்சர் பதவியை குறிவைத்தும் காய்களை நகர்த்த துவங்கி உள்ளது அறிவாலய வட்டத்தை கிடுகிடுக்க வைத்துள்ளது. இந்த நிலையில் எங்கே அமைச்சர் பதவி பறிபோகி விடுமோ என பயந்து நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு செய்த காரியம் தான் தற்பொழுது பரபரப்பாக பேசப்படுகிறது. சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியதாக அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு, மற்றும் திமுக எம்.பி.ஆராசா எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என விளக்கம் அளிக்க உத்தரவிடக்கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். 


இந்த வழக்குகள் நீதிபதி அனிதா சுமந்து முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது அமைச்சர் உதயநிதி தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகிய மனுஸ்மிருதி, சனாதனம் ஆகியவற்றையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று அரசின் உத்தரவு உள்ளிட்ட நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டி தனது வாதங்களை முன்வைத்தார். மேலும் முக்கிய வாதமாக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என கூறியது அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதா? என கேள்வி எழுப்பிக்கொண்டு நாத்திகத்தை பின்பற்ற உரிமை உள்ளது, சமூகநலம், சீர்திருத்தங்கள் பற்றி பேசவும் உரிமை உள்ளது எனக் கூறிய அவர் நீதிமன்றத்தில் எடுத்து வைத்த அந்த பாயிண்ட்தான் இன்று உதயநிதியை பற்றி கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.குறிப்பாக இது குறித்து வில்சன் வாதாடும் பொழுது 'உதயநிதி தனிப்பட்ட முறையில் தான் பேசினாரே தவிர! அமைச்சர் என்கின்ற முறையில் பேசவில்லை' என குறிப்பிட்டுள்ளார்.

அதாவது தனிப்பட்ட முறையில் பேசினால் அமைச்சர் பதவிக்கு வில்லங்கம் வராது இது அக்கறையில் தான் பேசியுள்ளார் என்பது போன்ற வாதத்தை திமுக தரப்பு தற்போது எடுத்து வைத்துள்ளது. அமைச்சராக இருந்து கொண்டு அந்த விழாவில் பங்கேற்கவில்லை, அழைத்தார்கள் சென்றேன்! பங்கேற்றேன்! இதன் காரணமாகத்தான் நான் பேசினேன் என திமுக தரப்பில் தற்பொழுது வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சில அரசியல் விமர்சகர்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர்கள் கூறியதாவது, 'இந்த விவகாரத்தில் திமுகவிற்கு பின்னடைவு என்பது அனைவருக்கும் தெரிந்தது! மேலும் இந்த விவகாரம் குறிப்பாக உதயநிதி சனாதனத்தை பற்றி பேசிய விவகாரம் I.N.D.I.A கூட்டணியில் இருந்து திமுகவை விரட்டுவது மட்டுமல்லாமல் இந்து முன்னணி தொடுத்த வழக்கு அமைச்சர் உதயநிதியின் பதவிக்கே குறி வைக்கிறது, அவர்கள் சரியான வழக்கை தொடுத்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக அமைச்சர் உதயநிதியின் பதவி பறிக்கப்பட்டால் அதும் தேர்தல் வரும் வேளையில் அமைச்சர் உதயநிதியின் பதவி பறிப்பு திமுகவிற்கு மேலும் பின்னடைவு ஏற்படுத்தும், ஏற்கனவே மக்கள் மத்தியில் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இப்படி திமுக அமைச்சரின் பதவி பறிபோகும் அளவிற்கு பேசினால் எதிர்காலத்தில் திமுகவிற்கு அது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி தரும். ஏற்கனவே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி என பேசி வருகிறார்கள், இந்த நிலையில் இந்து மதத்தை எதிர்த்து பறிக்கப்பட்ட அமைச்சர் பதவி என பேசுவார்கள்! இதன் காரணமாகத்தான் நீதிமன்றத்தில் வேறு வழியில்லாமல் அமைச்சராக பேசவில்லை தனிப்பட்ட முறையில் தான் பேசினேன் என சரணடைந்துள்ளது உதயநிதியின் தரப்பு' என கூறினார்கள். நாளுக்கு நாள் வரும் அரசியல் பின்னடைவின் காரணமாக இப்படி உதயநிதி தரப்பு சனாதன வழக்கில் சரணடைந்திருப்பது பல்வேறு விமர்சனங்களையும் குவித்து வருகிறது.