புதுதில்லி : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி ஜூலை 18 அன்று நாட்டின் 16 ஆவது குடியரசுத்தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக எதிர்க்கட்சிகள் வரிந்துகட்டிக்கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முனைப்பு கட்டி வருகின்றன. இருந்தபோதிலும் எதிர்கட்சிகளால் முன்மொழியப்பட்ட இரண்டு வேட்பாளர்களும் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளனர்.
மமதா தலைமையில் 17 எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஜனாதிபதி வேட்பாளரை தேர்ந்தெடுக்க அவசர சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துகொள்ளாமல் மமதாவே புறக்கணித்துவிட்டார். மேலும் ஆம் ஆத்மீ AIMIM ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் உட்பட பல முக்கிய கட்சிகள் பின்வாங்கிவிட்டன. இது ஆளும்கட்சிக்கு சாதகமாக அமையும் என கருதப்படுகிறது.
முக்கிய எதிர்க்கட்சிகள் வாக்குப்பதிவு நேரத்தில் ஆளும்தரப்பு வேட்பாளரை ஆதரிக்க பலத்த வாய்பிருப்பதாக கருதப்படுகிறது. முக்கியமாக ஆந்திரா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஓவைசியின் AIMIM ஆளும்தரப்பு வேட்பாளரை ஆதரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆளும் கட்சியான பிஜேபி தனது வேட்பாளர் குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை.
இந்நிலையில் நேற்று புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற குழு நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் அமித்ஷா ஜேபி நட்டா உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இந்த கூட்டம் மாலை தொடங்கும் என கூறப்பட்டிருந்தது.
ஆனால் கூட்டம் தொடங்கும் முன்னரே மத்திய அமைச்சர்கள் அனைவரும் துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடுவை சந்தித்தனர். இந்த குடியரசுத்தலைவர் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினருடனும் பேச ராஜ்நாத் சிங் மற்றும் நட்டாவுக்கு தலைமை அதிகாரம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வெங்கய்யா நாயுடுவுடனான அந்த சந்திப்பு தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. வெங்கய்யா நாயுடு வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற யூகங்கள் கிளம்பியுள்ளன. ஆனால் பிஜேபியின் ஸ்டைலே தனி. வேட்பாளர் அறிவித்தபின்னர் அவரை பற்றி நாம் கூகுளில் தேடித்தான் தெரிந்துகொள்ளவேண்டும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. மேலும் தற்போது 48 சதவிகித வாக்குகளை உறுதிப்படுத்தியிருப்பதால் பிஜேபி வேட்பாளரே வெற்றிபெறுவார் என கருதப்படுகிறது.
நேற்று நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் முன்னாள் ஜார்கண்ட் மாநில கவர்னரான திரௌபதி முர்மு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட உள்ள இரண்டாவது ஜனாதிபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.