பாஜக தலைவர் அண்ணாமலை இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக சட்டப்பேரவையில் தெரிவித்த கருத்திற்கு கடும் எதிர் வினையாற்றியுள்ளார்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தமிழக சட்டசபையில் அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார், இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் இது போன்ற மத ரீதியிலான பிரச்சனைகளை கையில் எடுத்து பேசாதீர்கள், மக்கள் குறைத்தீர்க்கும் விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இது பலரையும் அதிர்ச்சியடைய செய்தது சட்டமன்ற உறுப்பினர் கொண்டுவந்த தீர்மானத்தில் ஏன் அயோத்தியா மண்டபம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது என்ற எந்த விளக்கமும் கொடுக்காமல் முதல்வர் பாஜகவிற்கு அறிவுரை வழங்கியது கடும் சர்ச்சையை உண்டு செய்தது.
இந்த சூழலில் இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் காலை கேள்வி எழுப்பப்பட்டது அதற்கு பதில் கொடுத்த அண்ணாமலை ஆமாம் முதல்வர் என்ன பிஎச்டி முடித்து இருக்கிறாரா? எது பேசணும் பேசக்கூடாது என சொல்ல அவர் யார்? என வெளுத்து எடுத்து விட்டார்.
மேலும் விஜய் படத்தின் பீஸ்ட் திரைப்படத்தில் வரும் ஹிந்தி வசனம் குறித்த கேள்விக்கு நாங்களும் தான் விஜய் கருத்தை சொல்கிறோம், நீங்கள் உங்களுக்கு தேவை என்றால் எந்த மொழியை வேண்டுமானாலும் படியுங்கள், தமிழகத்திற்குள் மட்டும் உங்கள் தொழில் இருந்தால் தமிழ் மட்டுமே போதும் விஜய் படம் நான் இன்னும் பார்க்கவில்லை படம் நன்றாக இருப்பதாக கூறினார்கள் என சிரித்த படி பதில் கொடுத்தார். அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு வீடியோ கீழே இணைக்கபட்டுள்ளது.