
உலக அரசியல்தற்போது மிகவும் சிக்கலான கட்டத்தை எதிர்கொண்டு வருகிறது. ரஷ்யா–உக்ரைன் போர், அமெரிக்காவின் அதிகாரக் வரி கொள்கை, மேற்கத்திய நாடுகளின் புரியத இரட்டைச் செயல்பாடுஎன அனைத்தும் சேர்ந்து சர்வதேச சூழலை மாற்றி கொண்டு வருகிறார்கள் . இத்தகைய நேரத்தில், ஒரு நாட்டின் தலைவரின் முக்கிய பங்கு எப்படி இருக்கவேண்டும் என்பது தான் தற்போதைய பேசு பொருள். – நாட்டின் கௌரவத்தை காப்பது, மக்களின் நலனை பாதுகாப்பது.இதுவே ஒரு நாட்டின் தலைவராக இருக்க முடியும். அமெரிக்காவின் டிரம்ப் அமெரிக்காவின் நலனை விட்டு சொந்த பிசினஸ்மற்றும் ஈகோவால் அமெரிக்காவை உலக நாடுகளிடமிருந்து தனிமைபடுத்தி வருகிறார்.
இந்தக் கட்டத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையே உலக அரங்கில் ஒரு முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது. இதையே இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர் ஷாகி சலோம் வலியுறுத்தியுள்ளார். “இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூட மோடியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பதே அவரது அதிரடி கருத்து.
அமெரிக்கா, இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதித்தது, சர்வதேச அளவில் பெரிய அழுத்தமாக இருந்தது. பல தலைவர்கள் அச்சத்துடன் சமரசம் செய்வார்கள். ஆனால் மோடி வேறு வழியைத் தேர்ந்தெடுத்தார் இந்தியா – சீனா ரஷ்யாவும் இணைந்து, அமெரிக்காவை சிக்கலில் ஆழ்த்தினார்.ட்ரம்ப் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தபோதும், மோடி அமைதியை காக்க, ஆனால் தன் நிலைப்பாட்டில் தளராமல் இருந்தார். இறுதியில் ட்ரம்ப் தான் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இது சர்வதேச அரசியலில் “மாஸ்டர் ஸ்ட்ரோக்காக பார்க்கப்படுகிறது. இதனால் அமெரிக்காவின் முதுகெலும்பு உடைக்கப்பட்டது.
இந்தியா–பாகிஸ்தான் இடையே போர் சூழல் வெடிக்கத் தயாராக இருந்த காலத்தில், அமெரிக்கா தலையிட்டு “போரைக் கைவிடச் செய்தவன் நான்தான்” என்று ட்ரம்ப் பெருமைபேசினார். ஆனால் உண்மையில், மோடியின் துணிவு மிக்க நிலைப்பாடே பாகிஸ்தானை கட்டுக்குள் கொண்டுவந்தது.
“வம்பிழுத்தால் விடமாட்டோம்” என்ற எச்சரிக்கையும், ஆனால் போர் வெடிக்காமல் அமைதியை காக்கும் நிதானமும் – இரண்டும் சேர்ந்து இந்தியாவின் மதிப்பை உலக மேடையில் உயர்த்தின.
இந்த நிலையில் அமெரிக்க நட்பு நாடான இஸ்ரேல் நிபுணர் சலோம் இந்தியா பிரதமர் மோடி குறித்தும் இஸ்ரேல் பிரதமர் நெதன்கியூ குறித்தும் பேசியது உலக அளவில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது: “தனிப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க, நாட்டின் மதிப்பை அடமானம் வைப்பது தவறு.”“மோடியின் போல், தேசக் கௌரவத்தை முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும்.”இன்றைய சர்வதேச சூழலில், பல தலைவர்கள் அமெரிக்கா அல்லது மேற்கத்திய நாடுகளின் விருப்பத்திற்கே தங்கள் கொள்கையை மாற்றிக் கொள்கிறார்கள். ஆனால் மோடி, இந்தியாவினகௌரவத்தை மையமாகக் கொண்டு முடிவெடுக்கிறார்.அதுவே அவரை உலக அரசியலில் தனித்தன்மை வாய்ந்த தலைவராக மாற்றியுள்ளது.
நண்பனாக வந்தால் தோள் கொடுப்பார்; எதிரியாக வந்தால் கடுமையாகத் தடுத்து நிறுத்துவார். இந்த சமநிலையைப் பேணியதால்தான், மோடி இன்று சர்வதேச அளவில் “முன்னோடி” எனக் கருதப்படுகிறார்.
ஷாகி சலோம் கூறியிருக்கும் கருத்து, இன்று உலக அரசியல் சூழலைப் பார்த்தால் மிகுந்த
பொருத்தமுள்ளது.மோடி – தேசக் கௌரவத்தை காப்பதில் உறுதியானவர். “இஸ்ரேல் எதிர்காலத்திற்கு நல்லது வேண்டுமெனில், நெதன்யாகு மோடியிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என சலோம் வலியுறுத்துகிறார். எளிமையாகச் சொன்னால்: மோடி இன்று இந்தியாவின் மட்டுமல்ல, உலக அரசியலின் ஒரு முன்னுதாரணமாக மாறிவிட்டார்.