புதுதில்லி : இந்தியா சமீப வருடங்களாக பாதுகாப்பு தொழிநுட்பங்கள் மற்றும் உயர்ரக ஏவுகணைகள் முதலான ஆயுதங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. மேலும் உலகிலேயே மிக எடைகுறைந்த குண்டுதுளைக்காத உடைகளை தயாரிப்பதிலும் கவனம் செலுத்திவருகிறது. இவ்வகை ஆடைகள் சென்னையிலேயே உருவாக்கப்பட இருப்பது தமிழகத்திற்கு பெருமைதேடித்தரவிருக்கிறது.
இந்நிலையில் DRDO தலைவர் சதிஷ் ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில் " ரேடாரின் முதல் உற்பத்தி அலகுகளை உருவாக்கும் பணி ஏற்கனவே நடைபெற்று வருகிறது. 2024ல் முதல் அலகுகள் பரிசோதனை செய்யப்பட்டு சோதனை ஓட்டத்திற்கு தயாராகிவிடும். இந்த AESA அடிப்படையில் உருவாக்கப்படும் தரைதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ரேடார் 1000 கிலோமீட்டர் வரை எதிரிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவல்லது.
இந்த வகை ரேடார் வான்வெளி மற்றும் தரைவழி இலக்குகளை ஒரேநேரத்தில் 1000 கிலோமீட்டர் தூரம் கண்காணிக்கும். நீண்டதூர கண்டறிதல் செயல்பாடுகளை கொண்ட இந்த ரேடார் அமைப்பு அதிக செயல்திறனை கொண்டது. வான்வெளி அச்சுறுத்தல்களை கருத்தில்கொண்டு தயாரிக்கப்பட உள்ளது. இது மிக மேம்படுத்தப்பட்ட மின்னணு எதிர் அளவீட்டு திறன்களை கொண்டதாக தயாரிக்கப்படுகிறது.
இந்த வகை ரேடாரில் வடிவமைப்பு பல ரேடார்களின் ஆன்டெனா தொகுதிகளுடன் செயல்பட கூடியது" என DRDO தலைவர் சதீஸ் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் தரைவழி எதிரிகளின் நடமாட்டத்தை நீண்ட தூரத்திற்கு முன்பே கண்டறிய முடியும் என்பதால் எல்லையில் சீன துருப்புகள் நடமாட்டத்தை வெகுவிரைவில் அறிந்துகொள்ள இயலும்.