24 special

வம்பில் சிக்கிய செந்தில் அதிரடி மாற்றம் வருகிறதா கட்சியில்!?

Dhayanithi maran,  m.p senthil
Dhayanithi maran, m.p senthil

தருமபுரி எம்.பி செந்தில்  அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஏதேனும் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கம்... எனக்கு முறையாக தமிழில் பிழை இல்லாமல் எழுத தெரியாது என கூறியதில் இருந்து, ஊடகங்களில் உளறியது என செந்தில் குறித்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.


இந்த சூழலில்தான் திடீர் என சர்ச்சையை கிளப்பி இருந்தார் செந்தில், பொதுப்பணித்துறை சார்பில் நடைபெற்ற பூமி பூஜை நிகழ்விற்கு அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் செந்திலை அழைத்து இருக்கிறார்கள், நேராக வந்தவர் பூமி பூஜையை நிறுத்த கூறியதுடன், எப்படி இந்து மத சம்பரதாயம் மட்டும் செய்யலாம் என பூஜையை பாதியில் நிறுத்தினார்.

இந்த காணொளி இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது, பரவி வருவது ஒருபுறம் என்றால் செந்திலுக்கு எதிராக சொந்த கட்சியினரே கொதித்து எழ தொடங்கிவிட்டனர், சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் நிச்சயம் செந்திலுக்கு விளம்பரம் கிடைக்கிறது, ஆனால் கட்சிக்கு ஏற்கனவே இருக்கும் இந்து மதத்திற்கு எதிரானவர்கள் திமுகவினர் என்ற பிம்பம் மேலும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

செந்தில் கட்சியின் சீனியர்கள் சொல்வதை கேட்பது இல்லை, நேரடியாக தயாநிதி மாறனை விமர்சனம் செய்து இருக்கிறார், தினமலரை பாராட்டி பேசிய செந்தில் அவர் குறித்து செய்தி வெளியிடுவது இல்லை என சன் டிவி நிறுவனத்தை ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார், இவரால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை என பொறிந்து தள்ளி இருக்கின்றனர் தருமபுரி முக்கிய கட்சி நிர்வாகிகள்.

இந்த சூழலில்தான் வட தமிழகத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மூலமாக செந்திலை சமூக வலைத்தளங்கள் மற்றும் இது போன்ற தேவையில்லாத செயலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி திமுக தலைமை கூறி இருக்கிறதாம். 

கலைஞர் காலத்தில் கூட நாம் பூமி பூஜையை எதிர்த்தது கிடையாது, அரசு அதிகாரிகளுடன் மோதல் போக்கை என்றைக்கும் திமுக கையில் எடுத்தது கிடையாது அப்படி இருக்க செந்தில் போன்றவர்கள் இப்படி ஆர்ப்பாட்டம் என இறங்குவது நமக்கு தான் எதிராக முடியும் என வேதனை தெரிவிக்கின்றனர் உடன் பிறப்புகள்.

இது ஒருபுறம் என்றால் திமுகவின் ஆட்சியில் அதன் அரசு அதிகாரிகளை எதிர்த்தே திமுக கட்சியின் எம். பி. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது, அக்கட்சியின் அஸ்திவாரத்தையே ஆட்டியுள்ளது, முதல்வர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நேரத்தில் செந்தில் இதுபோன்று சமயம் சார்ந்த பிரச்னையை உண்டாக்கி இருப்பது திமுகவிற்கு பெரும் தலைவலையை உண்டாக்கி இருக்கிறது.

ஓ....இந்து மதம் படி பூஜைகள் செய்யக்கூடாது என்றால் ஏன் திராவிட மாடல் அரசாங்கம் இந்து சமய அறநிலையத்துறை மூலம், இந்து கோவில்கள், சொத்துக்கள், பணம், நகை போன்றவற்றை நிர்வாகம் செய்கிறது என செந்திலை நோக்கி பதில் கேள்வி எழுப்புகின்றனர் எதிர் தரப்பினர்.எப்படியோ.., செந்திலுக்கு அடுத்த தேர்தலில் நிச்சயம் திமுக சார்பில் சீட் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெளிவாகி இருப்பதாக திமுகவின் கிட்சன் கேபினட் வட்டாரங்கள் ஆர்டரே போட்டு விட்டார்களாம்.