தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு அவர் செய்த சில முக்கிய நிகழ்வுகள் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் Y பிரிவு பாதுகாப்பு வழங்கி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது அவற்றில் சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
1) மின்சார துறையில் நடக்க இருந்த ஊழலை நடக்கும் முன் கேள்வி கேட்டு தடுத்து நிறுத்தியது. 2) தீபாவளி ஸ்வீட் டெண்டரில் நடக்க இருந்த குளறுபடியை தடுத்து ஆவின் நிறுவனத்திடம் வாங்க வைத்தது.
3) அரசாங்க elcot நிறுவனத்திடம் லேப்டாப் ஏன் வாங்கவில்லை என்று கேள்வி எழுப்பியது. 4) அன்னூர் 3000 ஏக்கர் விளை நிலத்தில் அமையவிருத்த தொழில் பேட்டையை மக்களுடன் போராடி நிறுத்த வைத்தது
5) முல்லை பெரியாறு அணையில் தமிழகத்திற்கு தெரியாமல் தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து தேனியில் போராட, தமிழக அமைச்சரை அங்கே சென்று பார்வையிட வைத்தது
6) கோவில்களில் காணிக்கை நகைகளை அரசாங்கம் உருக்க தடை வாங்கியது. 7) டிவி நிகழ்ச்சியில் குழந்தைகளை கொண்டு பிரதமரை நக்கல் அடித்த கூட்டத்தை போலீஸ் விசாரணைக்கு வர வைத்தது.
8 ) சமூக வலைதள பதிவுகளுக்காக கைதான தேசியவாதிகளுக்கு குரல் கொடுத்து துணை நின்று அவர்கள் வெளியில் வர உதவியது
9) அரசுக்கு எதிராக யார் பேசினாலும் காவல்துறை கைது நடவடிக்கையின் மூலம் மக்களின் குரல்வளையை நெறித்த மாநில அரசுக்கு எதிராக சட்டப்போரட்டம் நடத்தி கருத்து சுதந்திரத்தை காக்க செய்தது.
10) எல்லாவற்றிக்கும் மேலாக ஏழை பெண் லாவண்யாவிற்கு குரல் கொடுத்து , இன்று வழக்கை சிபிஐ யிடம் கோர்ட் ஒப்படைக்க முக்கிய பங்கு வகித்தது என அண்ணாமலையின் செயல்பாடுகள் நீண்டு கொண்டே சென்றுள்ளன.
இதனால் குறிப்பிட்ட பிரிவினர் தொடங்கி பல்வேறு கார்ப்பரேட் அமைப்புகள் வரை அண்ணாமலை மீது காழ்புணர்ச்சியில் இருப்பதால் அவருக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன மேலும் தமிழக காவல்துறை அண்ணாமலைக்கு அளித்து வந்த பாதுகாப்பை குறைத்தது, பாஜக அலுவலகத்தின் இரு புறமும் இருந்த காவல் கண்காணிப்பை நீக்கியது போன்ற காரணங்கள் அண்ணாமலைக்கு மத்திய பாதுகாப்பு வழங்க காரணமாக பார்க்கப்படுகிறது.