24 special

சேம் சைட் கோல் போட்ட கமலஹாசன்! வீடியோ போட்டு பொளந்து கட்டிய நிர்மலா சீதாராமன்.. ஆண்டவர் மீது கடுப்பில் திமுக

NIRMALASITHARAMAN,KAMALHAASAN
NIRMALASITHARAMAN,KAMALHAASAN

பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. அதில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்கள் நீதி மய்ய தலைவரும், ராஜ்ய சபா எம்.பி.யுமான நடிகர் கமல்ஹாசன் உரையாற்றினார். இது ராஜ்ய சபாவில் அவர் ஆற்றும் முதல் உரையாகும். முதலில் ஆங்கிலத்தில் பேசிய கமல்ஹாசன் பின்னர், தமிழிலும் உரையாற்றினார்.தெலுங்கில் இசைபாடி வந்த அந்த மாமனிதர் இசைமேதை தியாகராஜன். அவரின் பிச்சை பாத்திரத்தில் இருந்து எடுத்த சில்லறைகள் நவீன காலத்திற்கு உதவாது என்று தெரிந்தவர்கள் நீங்கள்.நீங்கள் வெள்ளைக்கார கல்வி கற்றவர்கள், கண்டிப்பாய் கற்பூர புத்தி தான். அது காற்றோடு போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. 


அதன் பிறகு உங்கள் பிச்சை பாத்திரம் உருமாற்றப்பட்டது. பிச்சை குவளை பெரும் உண்டியல் ஆனது.அந்த உண்டியலை உடைத்து நிதி திரட்ட உதவுவோர் இன்று தமிழை, தமிழரை பார்த்து என்ன சொல்கிறீர்கள்? தமிழ் பிச்சை எடுக்கக்கூடா உதவாதா? ஓரளவு உண்மைதான். ஒரு தெற்கத்தீ அறிவுரை தங்காய். தமக்கென உங்கள் நீதியை திரட்ட ஆங்கிலத்தில், ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே? என அடுக்கு மொழியில் யாருக்கும் புரியகூடாது என்ற ஒரே எண்ணத்தில் கமல் அவரின் கன்னி பேச்சை  பேசினார். 

மேலும் தமது உரையில் தொடக்கத்தில் ஆங்கிலத்தில் பேசினார். அதன் பின்னர் அவர் தமது உரையை தமிழில் தொடர்ந்தார். அவரின் இந்த தமிழ் உரையை கேட்டு அவையில் இருந்த நன்கு தமிழ் தெரிந்த எம்பிக்களே எதுவும் புரியாமல் திகைத்தனர்.. இதன் விளக்கத்தை சரியாக சொல்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் கூட தரலாம்.கமல் பேச்சு, தமிழக எம்பிக்கள் பலருக்கும், சத்திய சோதனை என்ற கவுண்டமணியின் பிரபல வசனத்தை நினைவுபடுத்துவதாக இருந்தது.

தப்பு தப்பாக பேசிய கமலை வெளுத்துவிட்டுள்ளார் மத்திய நிதி அமைச்சர்  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  மாநிலங்களவையில், மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தமிழ் மொழியைப் பற்றி இழிவான சொற்களைப் பயன்படுத்தியதாகத் திரு. கமல்ஹாசன் 

ஒரு தவறான தகவலைத் தெரிவித்துள்ளார்.அதேபோல், @NewsTamilTV24x7 செய்தி ஊடகமும் எந்தவொரு அடிப்படைச் சரிபார்ப்பும் இன்றி, அமைச்சரின் பெயரில் தவறான ஒரு கருத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளது.

கடந்த 2025 மார்ச் மாதம் நடைபெற்ற நிகழ்வில், நிதியமைச்சர் அவர்கள் திரு. ஈ.வெ. ராமசாமி நாயக்கர் அவர்களின் கூற்றையே தெளிவாக மேற்கோள் காட்டினார்; அது அவருடைய சொந்தக் கருத்து அல்ல. இது குறித்த வீடியோ ஆதாரத்திற்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களைத் தவறாக வழிநடத்தியதற்காகவும், கௌரவத்திற்குரிய மத்திய அமைச்சரின் பேச்சைத் திரித்துக் கூறியதற்காகவும் அந்தச் செய்தி நிறுவனம் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும்  என் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அந்தபதிவைநீக்கியுள்ளது தனியார் தொலைக்காட்சி நிறுவனம்.