புதுதில்லி : திரு. நரேந்திரமோடி தலைமையிலான அரசு கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் சிவில் விமானபோக்குவரத்து வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர் 228 விமானத்தை வணிகநோக்கங்களுக்காக பயன்படுத்த DGCA ஒப்புதல் வழங்கி வர்த்தக விமானபோக்குவரத்தில் புரட்சிக்கு வித்திட்டது.
கடந்த டிசம்பர் 2017ல் DGCA (சிவில் விமானபோக்குவரத்து இயக்குனரகம்) பொதுத்துறையாக செயல்படும் ஹால்க்கு டோர்னியர் 228 விமானம் பறக்க அனுமதி வழங்கியது. மேலும் மத்திய சிவில் விமானபோக்குவரத்துத்துறை அமைச்சகம் அலையன்ஸ் ஏர் நிறுவனத்திற்கு டோர்னியர் 228 ஐ கடற்படையில் சேர்த்துக்கொள்ள அனுமதிவழங்கியிருந்தது. இது மத்திய பிஜேபி அரசின் முற்போக்கு திட்டமான UDAN ஐ ஊக்குவிக்கும் விதத்தில் அமைந்தது.
2022 பிப்ரவரியில் அலையன்ஸ் ஏர் நிறுவனம் 19 இருக்கைகள் கொண்ட இரண்டு டோர்னியர் விமானங்களை குத்தகைக்கு எடுக்க ஹால் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு விமானங்களில் முதல் டோர்னியர் விமானத்தை கடந்த ஏப்ரல் மதம் 7 அன்று பெற்றுக்கொண்டது. அதிலிருந்து சரியாக ஐந்துநாள் கழித்து டோர்னியர் முதல்பயணத்தை தொடங்கியது.
ஏப்ரல் 12ல் டோர்னியர் அஸ்ஸாம் மாநிலம் திப்ருகார் விமனநிலையத்திலிருந்து அருணாச்சலப்பிரதேச மாநிலம் பாஸிகாட்டுக்கு புறப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் மத்திய விமானபோக்குவரத்துத்துறை அமைச்சர் சிந்தியா மற்றும் சட்ட அமைச்சர் கிர்ரென் ரிஜ்ஜு ஆகியோர் கலந்துகொண்டனர். ஏப்ரல் 7லிலிருந்து டோர்னியர் தொடர்ந்து அதே வழித்தடத்தில் பயணித்துவருகிறது.
அதேபோல கடந்த வியாழன்று திப்ருகார் முதல் அருணாச்சல பிரதேசத்தின் இன்னொரு நகரான தேசுவுக்கு டோர்னியரை இயக்க அலையன்ஸ் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. மேலும் சில மாநிலங்களுக்கு இந்த விமானசேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் என தெரிகிறது. இந்த டோர்னியர் உள்நாட்டு வர்த்தக போக்குவரத்தை கருத்தில்கொண்டு செயல்பட உள்ளது.
இனி அனைத்து மாநிலங்களிலும் இந்த வர்த்தக விமானம் தனது சேவையை தொடங்கும் . இதனால் உள்நாட்டு வர்த்தக விமான போக்குவரத்தில் புதிய புரட்சி ஏற்படும் என அலையன்ஸ் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.