
அரசியல் உலகையே அதிரவைக்கும் வகையில் மத்திய அரசு புதிய அதிரடி சட்டத்தை அறிமுகம் செய்ய உள்ளது.. இது அரசியலை புரட்டி போடும் என்றால் அது மிகையாகாது. தீவிர குற்ற வழக்குகளில் சிறையில் அடைக்கப்பட்ட முதலமைச்சர், அமைச்சர்கள் இனி 30 நாட்களுக்கும் மேல் பதவியில் நீடிக்க முடியாது என மத்திய அரசு புதிய சட்டத்தை அறிமுகம் செய்கிறது.
இப்போது வரை, எவரும் சிறையில் இருந்தாலும் பதவியில் நீடிக்க முடிந்தது. பலர் சிறையிலிருந்தபடியே முதல்வர், அமைச்சராகத் தொடர்ந்து வந்துள்ளனர். சிலர் மாதக்கணக்கில் சிறை வாழ்வு அனுபவித்த பிறகே ராஜினாமா செய்துள்ளனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை அறிமுகம் செய்கிறார்.
மசோதாவின் சிறப்பம்சங்கள்:தீவிர குற்ற வழக்குகளில் (corruption, money laundering, CBI/ED கொலை வழக்குகள் போன்றவற்றில் கைது செய்யப்பட்டு தொடர்ச்சியாக 30 நாட்கள் சிறையில் இருந்தால், அந்த நபர் 31வது நாளிலேயே தானாகவே பதவியில் இருந்து நீக்கப்படுவார்.
1963ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தில் யூனியன் பிரதேசங்களுக்கு தொடர்பான தெளிவான விதிகள் இல்லை. அதைத் திருத்தும் வகையிலும் இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் சிறையில் இருந்தபடியே ஆட்சியைக் கட்டுப்படுத்தும் நடைமுறை இனி நிறுத்தப்பட உள்ளது.ஊழல் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளில் சிக்கியவர்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பே கிடையாது என்ற வலியுறுத்தலுடன் இம்மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுவரை பல்வேறு ஊழல், குற்றச்சாட்டு வழக்குகளில் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் அமைச்சராக செயல்பட்டு வந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில், பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் கைதாகி, ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் பதவி வகித்துள்ளனர்.டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன்தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜிபோன்ற பலர் ஊழல் மற்றும் நிதி முறைகேடு வழக்குகளில் கைதாகி, சிறையில் இருந்தும் அரசியல் அதிகாரத்தை தொடர்ந்தனர்.
இத்தகைய சூழலைத் தடுக்கும் வகையிலேயே இந்த புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால் பதவியில் நீடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மசோதா அமலுக்கு வந்தால், அரசியலில் பெரிய அதிரடி ஏற்படும். குற்றச்சாட்டில் சிக்கியவர்கள் இனி அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்பதால், அரசியல் கட்சிகளுக்கு இது உண்மையான “ஷாக்”!
அரசியலில் “குற்றவாளிகள் அதிகாரத்தில் நீடிக்கக் கூடாது” என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு பதிலாகவே இந்த மசோதா வருகிறது.
அதனால்,ஊழலில் சிக்கியவர்கள் பதவியை காக்க முடியாது,அரசியல் கட்சிகள் குற்றச்சாட்டில் சிக்கிய தலைவர்களை காப்பாற்ற முடியாது, சுத்தமான அரசியலுக்கு இது ஒரு தொடக்கக் கட்டமாக இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது ஒரு வகையில் அரசியல் சுத்திகரிப்பு நடவடிக்கையின் தொடக்கம் என்று பலரும் கூறுகின்றனர்.
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், பல்வேறு மாநிலங்களில் தற்போது வழக்குகள் சந்தித்து வரும் அரசியல்வாதிகள் பதவியில் நீடிக்க முடியாது என்பதால், அரசியல் அமைப்பில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என வட்டாரங்கள் கருதுகின்றன.மக்களிடையே, “இது தாமதமாக வந்தாலும், சரியான முடிவு” என ஆதரவு குரல்கள் எழுந்துள்ளன.