24 special

32 வருட சேவை..! கண்ணீர்மல்க விடைகொடுக்கப்பட்ட கப்பல்கள்..!

Indian navy
Indian navy

மும்பை : இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களான ஐ.என்.எஸ் அக்சய் மற்றும் ஐ.என்.எஸ்.நிஷாங்க் ஆகிய கப்பல்கள் நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. ஆபரேஷன் தல்வார் மற்றும் ஆபரேஷன் பரக்ராம் சேவைகளில் இந்த கப்பல்கள் 32 ஆண்டுகள் சேவை செய்தது குறிப்பிடத்தக்கது. பணிநீக்கத்தின்போது சூரிய அஸ்தமனத்தில் தேசியக்கொடி மற்றும் கடற்படை கொடிகள் கழற்றப்பட்டு பென்னெட் மரியாதை செலுத்தப்பட்டது.


இந்த பணிநீக்க நிகழ்ச்சி மும்பை கடற்படை கப்பல்தளத்தில் நடைபெற்றது. முதற்கப்பலான ஐ.என்.எஸ்.நிஷாங்க் 1989ல் செப்டம்பர் 12 அன்று இயக்கப்பட்டது. ஐ.என்.எஸ் அக்சய்  டிசம்பர் 10 1990ல் ஜார்ஜியாவில் இருந்து இயக்கப்பட்டது. ஐ.என்.எஸ் அக்சய் மற்றும் ஐ.என்.எஸ்.நிஷாங்க் மகாராஷ்டிரா கடற்படை கொடி அதிகாரியின் கட்டுப்பாட்டில் 32 ஆண்டுகள் இயங்கிவந்தன.



இந்த இரு கப்பல்களும் 22 ஏவுகணை கப்பற்படை மற்றும் 23 ரோந்துகப்பல்களை கொண்ட கப்பற்படைப்பிரிவின் ஒரு பகுதியாக செயல்பட்டு வந்தன. கடற்படை இதுகுறித்து தெரிவிக்கையில் " இந்த இருகப்பல்களும் கடந்த 32 ஆண்டுகளாக சுறுசுறுப்பான கடற்படை சேவையில் இருந்தன. இந்த கப்பல்களின் புகழ்பெற்ற பயணம் என்பது கார்கில் போராகும்.

கார்கில் போரின்போது ஒப் தல்வார் மற்றும் 2001ல் ஒப் ப்ரக்ராம்  நடவடிக்கைகளில் பங்கேற்றதை ஒருபோதும் மறக்க முடியாது" என இந்திய கப்பற்படை தெரிவித்துள்ளது. இரு கப்பல்களை பணிநீக்கம் செய்யும் நிகழ்ச்சியில் பல மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

1995-96ல் ஐ.என்.எஸ்  நிஷாங் கப்பலுக்கு தலைமை தாங்கிய தற்போதைய கடற்படை தலைவர் அட்மிரல் ஆர். ஹரி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். மேலும் 1996ல் ஐ.என்.எஸ். அக்சய் கப்பலுக்கு தலைமைதாங்கிய எம். கோபிநாத்தும் பங்கேற்றார்.  இந்த நிகழ்வில் கோபிநாத் " எனது தந்தை ஐ.என்.எஸ் அக்சய் கப்பலில் கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்ததை நேரில் கண்டேன். 

எனது ஆசைப்படி நான் கடற்படை அதிகாரியாக ஆனேன். அந்த கப்பலை வழிநடத்தும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது" என கூறினார். இந்த பணிநீக்க நிகழ்வின்போது பல அதிகாரிகளின் கண்கள் கலங்குவதை காணமுடிந்தது. கடந்த வாரம் இதேபோல 34 வருட சேவைகளுக்கு பிறகு ஐ.என்.எஸ் கோமதி பணிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

கடற்படை பரம்பரியப்படி ஒரு கப்பல் பணிநீக்கம் செய்யப்படுகிறது என்றால் அது செயல்பாட்டில் இல்லை அல்லது இறந்துவிட்டது என்ற பொருள் அல்ல. அதே பெயரில் மீண்டும் ஒரு புதிய கப்பல் இயக்கப்படும் என்பது நாம் அறிந்திராத ஒன்று.