24 special

76000 கோடி ராணுவத்தளவாடங்கள்..! வேற லெவல் இந்தியா..!


புதுதில்லி : மத்திய அரசின் மற்றொரு சிறந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து 76,300 கொடிகள் மதிப்பிலான ராணுவ தளவாடங்கள் மற்றும் தளங்களை வாங்குவதற்கு MOD (மினிஸ்ட்ரி ஆப் டிபென்ஸ்) ஒப்புதல் அளித்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.


DAC எனப்படும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களின் தலைமையில் இயங்கும் பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சக செய்திக்குறிப்பு உறுதிப்படுத்தியுள்ளது.இந்திய கடற்படைக்காக சுமார் 36000கோடி மதிப்பிலான அடுத்த தலைமுறைக்கான கொர்வெட்டுக்களை வாங்க டிஏசி ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த  கொர்வெட்டுக்கள்  கண்காணிப்பு பணிகள் எஸ்கார்ட் செயல்பாடுகள் மற்றும் தடுப்பு மற்றும் மேற்பரப்பு நடவடிக்கைகள் SAG செயல்பாடுகள் போன்றவற்றிற்கு சிறந்த தளமாக அமையப்போகிறது. மேலும் கப்பல்கட்டும் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய கடற்படையின் புதிய உள்வடிவமைப்பு விதியின்கீழ் இந்த  கொர்வெட்டுக்கள் கட்டப்படும் என்பதை பாதுகாப்புத்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே HAL எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல்ஸ் மூலம் டோர்னியர் விமானம் மற்றும் SU-30 MKI விமானங்களின் ஏரோ இன்ஜின்களை தயாரிக்கவும் DAC ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. மேலும் DAC நமது இந்திய ராணுவத்திற்கு கரடுமுரடான போர்க் லிப்ட் ட்ரக்குகள், பாலங்கள் அமைக்கும் தொட்டிகள், சக்கரங்கள் கொண்ட கவசப்போர் வாகனங்கள்,

டேங்குகளை அழிக்கும் ஏவுகணைகள், டேங்க் வழிகாட்டு ஏவுகணைகள், மேம்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள்  ஆகியவற்றை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இந்திய நிறுவனகளிடமிருந்து உள்நாட்டிலேயே வாங்கப்பட உள்ளது. மேலும் கடற்படைக்கான விமானங்களும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களும் வாங்கப்படவிருக்கின்றன.