கர்நாடகா : பீதர் மாவட்டம் பசவகல்யாணம் பகுதியில் அமைந்துள்ள பீர் பாஷா பங்களா தர்காவை இந்திய தொல்லியல் துறையான ASI ஆய்வுநடத்தவேண்டும் என லிங்காயத்துக்கள் கூட்டமைப்பு மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைகளுக்கு பெயர்போன கர்நாடகாவில் இதன்மூலம் சிலமாதங்களுக்கு தாராளவாதிகளுக்கும் விலைபோன ஊடகங்களுக்கும் செய்திகளுக்கு பஞ்சமிருக்காது.
லிங்காயத்துகள் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் " பீதர் மாவட்டம் பசவகல்யாணம் பகுதியில் அமைந்துள்ள பீர் பாஷா பங்களா தர்காஒரு உண்மையான அனுபவ மண்டபம். லிங்காயத் சமயத்தை நிறுவியவரான 12ம் நூற்றாண்டை சேர்ந்த சமுக சீர்திருத்தவாதியான பசவேஸ்வராவின் புனித இடமாகும். உலகின் முதல் பாராளுமன்றம் இந்த அனுபவ மண்டபம்.
அந்த அனுபவ மண்டபம் தற்போது பீர் பாஷா தர்காவாக மாறியுள்ளது. இதற்கான ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் எங்களிடம் உள்ளது.இந்த அனுபவ மண்டபத்திற்கு ASI உடனடி பாதுகாப்பு வழங்கவேண்டும். மேலும் அந்த பீர் பாஷா பங்களா தர்காவை முழுமையாக ASI ஆய்வுநடத்தி அறிக்கை வெளியிடவேண்டும்.
அனுபவ மண்டபத்தை மீட்டெடுக்க அதை பாதுகாக்க மத்திய அரசு 500 கோடி நிதி ஒதுக்கவேண்டும்" என லிங்காயத்துக்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
மேலும் லிங்காயத்துகளுக்கான தூதுவர்கள் குழு நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கையை எழுப்பியுள்ளனர். இதுகுறித்து பேசிய சிவாச்சாரியார் ராஜேஸ்வர் "அனுபவ மண்டபம் தொடர்பான ஆவணங்களை முதலமைச்சரிடம் கொடுத்துள்ளோம். அவர் ASI ஆய்வுநடத்த கேட்டுகொள்ளப்போவதாக எங்களிடம் உறுதியளித்துள்ளார்" என செய்தியாளர்களிடம் சிவாச்சாரியார் தெரிவித்தார்.
மேலும் பசவகல்யாண தொகுதி பிஜேபி சட்டமன்ற உறுப்பினர் ஷரணு சலகர் செய்தியாளர்களிடம் "வீரசைவ லிங்காயத்துகள் சார்பில் பிரதீப் கனகன் வாடி மற்றும் எனது தலைமையிலான குழு நபர்கள் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்தோம். இஸ்லாமிய துறவி என கருதப்படும் பீர் பாஷாவின் சமாதி உண்மையான அனுபவ மண்டபம். சீர்திருத்தவாதி பசவேஸ்வர் அய்யாவின் திருத்தலம். இதற்கான ஆவணங்களை முதல்வரிடம் சமர்ப்பித்துள்ளோம்" என கூறினார்.