24 special

செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு மிக பெரிய சிக்கல்

Gayathri,senthil balaji
Gayathri,senthil balaji

திமுகவின் அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய உறவினர்கள் நண்பர்கள் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பலரின் வீடு மற்றும் அலுவலர்கள் அனைத்திலும் தமிழ்நாட்டிற்கு உள்ளேயும் தமிழ்நாட்டை விட்டு வெளிமாநிலங்களிலும் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் நடத்தப்படவில்லை என்றாலும் அவருக்கு நெருங்கிய உறவாக இருக்கும் அவரின் சகோதரர் அசோக்கின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகாரிகள் கரூர் மாவட்டம் ராமகிருஷ்ணபுரம் பகுதியில் உள்ள அசோக்கின் வீட்டிற்கு சென்றனர், அதிகாரிகள் சென்ற பொழுது அசோக்கின் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது மேலும் வீட்டிற்குள் யாரும் இல்லாதது போன்று தெரிந்துள்ளது. 


இருப்பினும் ஐடி அதிகாரிகள் வீட்டிற்குள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட முயன்றுள்ளனர், முன்னதாக ராமகிருஷ்ணபுரம் பகுதிக்குள் வருமானவரித்துறையினரின் வாகனம் உள்ளே வந்த போதே அங்கு பொதுமக்கள் போன்று சாதாரண உடையில் இருந்த செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தின் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதனை தட்டிக் கேட்ட அதிகாரிகளையும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் பெண் அதிகாரியான காயத்ரி என்பவரின் பேக்கையும் பிடுங்கி அதில் உள்ளே என்ன வைத்துள்ளீர்கள் என்று அத்திமீறி உள்ளனர் இந்த ஆதரவாளர்கள். பிறகு வருமானவரித்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். எந்த ஒரு மாநிலத்திலும் எந்த ஒரு மாவட்டத்திலும் நடக்காத ஒரு சம்பவம் ஒரு அரசு அதிகாரி அதுவும் வருமானவரித்துறையின் பெண் அதிகாரியை தாக்கியது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இச்சம்பவத்தில் தாக்கப்பட்டுள்ள பெண் அதிகாரி காயத்ரி முன்னாள் தடகள வீரர். அரியலூர் மாவட்டத்தில் ஒரு ஏழ்மை குடும்பத்தில் இருந்து தடகளத்தில் பல சாதனைகளை புரிந்து தற்போது வருமான வரித்துறை அதிகாரியாக பணியாற்றிவருகிறார். விளையாட்டில் அதிக கவனம் இருந்தாலும் தனது பள்ளி படிப்பிலும் அதே சிறப்பான கவனத்தை செலுத்தி இரண்டிலும் சாதனை பெற்று தற்போது தனது குடும்பத்தையும் முன்னேற்றி உள்ளார் வருமானவரித்துறை அதிகாரி காயத்ரி. இவ்வளவு சாதனைகளை புரிந்த பெண் அதிகாரி காயத்ரி மீது தான் தற்போது செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது இந்த தாக்குதல் சூழ்நிலை காரணமாக ஏற்பட்டது அல்ல திட்டமிட்டு செயல்பட்டது என்று உறுதியாகும் அளவிற்கு ஆதாரம் இருக்கிறது என்று கூறப்படுகிறது. 

தற்போது சிகிச்சை முடிந்து திரும்பிய பொழுது செய்தியாளர்களை சந்தித்த வருமானவரித்துறை இயக்குனர் சிவசங்கரன், தங்கள் பணிகளை செய்ய வந்த அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது மேலும் இது பற்றி சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு ஒன்று பதியப்பட்டு உள்ளது. இந்த மனுவில் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியது திட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்பதை குறிக்கும் வகையில் ஆடியோ ஆதாரமும் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் சோதனையின் போது கைப்பற்றிய பணம் மற்றும் ஆவணங்கள் முழுவதையும் எங்கள் தலைமையகத்தில் நிச்சயமாக வெளியிடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

ஆரம்பத்தில் புகார்களை சந்தித்துக் கொண்டிருந்த செந்தில் பாலாஜி வருமானவரித்துறை வட்டத்திற்குள் வந்தார், இருப்பினும் ஐ டி ரெய்டு என்பது எங்களுக்கு புதிதல்ல, செய்தியாளர்களிடம் இருந்து மீட்டிங் முடிச்சிட்டு வருகிறேன் என்று கூலாக தனது அலுவல் பணிகளை செய்ய சென்ற செந்தில் பாலாஜியின் கழுத்து தற்போது இறுகும் படியான நிகழ்வுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த தாக்குதலில் அதிகமாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியான காயத்ரியிடம் மத்திய அரசு அறிக்கை ஒன்றை கேட்டுள்ளது. மருத்துவமனை சிகிச்சையிலிருந்து இன்று வீடு திரும்பியுள்ள காயத்ரி விரைவில் மத்திய அரசு கேட்ட அறிக்கை ஒன்றையும் சமர்ப்பிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் இந்த அறிக்கையால் செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கைக்கு மாபெரும் சிக்கல் ஏற்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.