24 special

மொத்தமாக அடியோடு மாற்றம்...சீன் போட்ட அமெரிக்கா ...மண்டியிட வைத்த இந்தியா! வழிக்கு வந்த நேட்டோ (NATO)

PMMODI,DONALDTRUMP
PMMODI,DONALDTRUMP

 அமெரிக்க தற்போது எதற்கெடுத்தாலும் பேசிவரும் ஒரே வார்த்தை வரி உயர்த்தப்படும் என்பது மட்டுமே அமரிக்காவுக்கு ஆதரவு நிலை எடுக்காவிட்டால் வரியை உயர்த்துவோம் என கூறி வருகிறார்கள். இதற்கிடையே ரஷியாவுடன் வா்த்தகத்தைத் தொடா்ந்தால் இந்தியா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் என ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் விடுத்த அச்சுறுத்தலுக்கு, ‘இரட்டை நிலைப்பாடு எடுக்க வேண்டாம்’ என்று வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று இந்தியாவை எச்சரிக்கும் அதே நாடுகள், ரஷியாவுடன் மறைமுக வழிகளில் வா்த்தகத்தில் ஈடுபடுவதாக விமா்சனம் உள்ள நிலையில், இந்தியா இவ்வாறு பதிலடி அளித்துள்ளது.


ரஷியா-உக்ரைன் போா் கடந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்த முயற்சிகள் தோல்வியைத் தழுவின.இந்நிலையில், அடுத்த 50 நாள்களுக்குள் ரஷியா அமைதி பேச்சுவாா்த்தைக்கு உடன்பட வேண்டும் அல்லது இரண்டாம் கட்ட பொருளாதார தடைகளை எதிா்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளாா்.அமெரிக்காவின் இந்த முடிவிற்கு டிரம்ப்பை தவிர மற்ற அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையொட்டி, உக்ரைனுக்கு கூடுதல் ராணுவ உதவி, வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள் மற்றும் வெடிபொருள்களை வழங்குவதாகவும் அதிபா் டிரம்ப் அறிவித்துள்ளாா். இதற்கான நிதி பெரும்பாலும் ஐரோப்பிய நட்பு நாடுகளால் வழங்கப்படுகின்றன.இச்சூழலில்,  ‘நேட்டோ’ அமைப்பின் தலைவா் மாா்க் ரூட்டே , செய்தியாளா்களிடம் கூறுகையில் , ‘ரஷியா-உக்ரைன் போரில் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ரஷியா ஒப்புக்கொள்ளாவிட்டால், அந்நாட்டுடனான வா்த்தக உறவுகளை இந்தியா, சீனா மற்றும் பிரேஸில் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது பொருளாதார தடைகளைச் சந்திக்க நேரிடும்.இல்லையெனில், அது அந்த மூன்று நாடுகளையே மிகப்பெரிய அளவில் பாதிக்கும்’ என்றாா்.

இந்தியாவை நேரடியாக அச்சுறுத்தும் வகையில் அமைந்த மாா்க் ரூட்டே கருத்து சா்ச்சையானயுள்ள நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால்  உலக சந்தையில் எந்த நாட்டில் குறைந்த விலையில், நம்பகமான முறையில் எரிசக்தி கிடைக்கிறதோ, அங்கிருந்து கொள்முதல் செய்வது என்ற நியதியை வழிகாட்டுதலாக கொண்டுள்ளோம். அதை தான் பின்பற்றுவோம் என பதிலடி தந்தார். 

இதற்கிடையே ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய 3 நாடுகளின் தூதரகங்கள் பரஸ்பர நலன் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க ஆர்ஐசி என்ற முறையை அமைத்திருந்தன. கரோனா பரவல் காரணமாகவும், கிழக்கு லடாக்கில்  இந்தியா - சீனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகவும் ஆர்ஐசி முறையின் செயல்பாடு தடைபட்டது.

தற்போது இந்தியா - சீனா இடையே கருத்து வேறுபாடுகள் மறைந்து வருகின்றன. சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீன பயணம் மேற்கொண்டு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங், வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ ஆகியோரை அவர் சந்தித்து பேசினார். இதில் ஆர்ஐசி முறையை மீண்டும் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது .சீனா, ரஷ்யா, இந்தியா ஆகிய 3 நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு பரஸ்பர நலன் மட்டும் இன்றி, உலக அமைதி, முன்னேற்றத்துக்கும் உதவும்” என்றார்.

அமெரிக்கா இந்தியா சீனா ரஷ்யா போன்ற நாடுகளை மிரட்டிய நிலையில் இந்த மூன்று நாடுகளும் இணைந்துள்ளது அமெரிக்காவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவை எதிர்ப்பதற்கு இந்தியா, ரஷ்யாவின் உதவி தேவை என்பதால், முத்தரப்பு உறவை புதுப்பிக்கும் முயற்சிக்கு சீனாவும் தற்போது முழு ஆதரவு தெரிவித்துள்ளது.இதனால் இந்தியா தற்போது அமெரிக்காவை கைக்குள் கொண்டுவந்துள்ளது.