24 special

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ,.. அறிவாலயத்தை நோக்கி வரும் அடுத்த பேராபத்து! அம்பலமான திமுகவின் நிதி மோசடி

PMMODI,MKSTALIN
PMMODI,MKSTALIN

மத்திய அரசின் திட்டங்களுக்குத் திமுக அரசு  தங்களுடைய முஸ்டிக்கரை ஒட்டி , அவை மாநில அரசின் சொந்தத் திட்டங்கள் போன்ற பிம்பத்தை உருவாக்குவதில் தி.மு.க. அரசு கைதேர்ந்துள்ளதாக ஒரு வலுவான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக, பணிபுரியும் பெண்களின் நலனுக்காக மத்திய அரசு 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று கொண்டு வந்த 'சக்தி நிவாஸ்' திட்டத்தின் நீட்சியாகவே தமிழகத்தில் 'தோழி' விடுதிகள் தொடங்கப்பட்டன. இதற்காக மத்திய அரசு 223 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அதில் 147.18 கோடி ரூபாயை ஏற்கனவே விடுவித்துள்ள நிலையில், இந்த விடுதிகள் அனைத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சொந்தச் சிந்தனையில் உருவானது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஆளுங்கட்சியினர் ஏற்படுத்த முயல்கின்றனர்.


மத்திய அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களுக்குத் தடையாக இருப்பது அல்லது அந்தத் திட்டங்களின் பெயரை மாற்றி மாநிலத் திட்டம் போலக் காட்டுவது என்பது தி.மு.க.வின் வழக்கமான அரசியலாக மாறியுள்ளது. ஒரு திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை மத்திய அரசு வழங்கும்போது, அதற்குரிய அங்கீகாரத்தை வழங்காமல், விளம்பரச் செலவுகளில் மட்டும் கோடிக்கணக்கில் மக்கள் பணத்தைச் செலவிட்டு 'ஸ்டிக்கர்' ஒட்டுவது நிர்வாக நேர்மையற்ற செயலாகும்.

உதாரணமாக, ஜல் ஜீவன் மிஷன், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம் போன்ற பல மத்திய அரசு திட்டங்கள் தமிழகத்தில் செயல்படுத்தப்படும்போது, அதன் அடிப்படை ஆதாரமான மத்திய அரசின் பங்களிப்பை மறைத்துவிட்டு, மாநில அரசு மட்டுமே முழுச் செயல்பாட்டையும் செய்வது போன்ற பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. 'தோழி' விடுதி விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. மத்திய அரசின் நிதி உதவியுடன், 2023 ஜூலையில் தொடங்கப்பட்ட ஒரு திட்டத்தை, தற்போது ஏதோ புதியதாகத் தாங்களே கண்டுபிடித்தது போல முதல்வர் கூறுவது பொதுமக்களை ஏமாற்றும் செயலாகும்.

சொந்தமாகப் புதிய திட்டங்களைச் சிந்தித்துச் செயல்படுத்தத் துப்பில்லாத அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்குத் தங்கள் கட்சி வண்ணம் பூசி விளம்பரம் தேடிக் கொள்வதை விட, அந்த நிதியை முறையாகப் பயன்படுத்தி மக்களுக்கு இன்னும் கூடுதலான வசதிகளைச் செய்து கொடுத்திருக்கலாம். விளம்பர அரசியலுக்காகச் செலவிடப்படும் நிதியை ஆக்கப்பூர்வமான மக்கள் நலப் பணிகளுக்குப் பயன்படுத்தினால் மட்டுமே தமிழகம் உண்மையான வளர்ச்சியை எட்ட முடியும். ஆனால், தி.மு.க.வோ மக்களின் வரிப்பணத்தில் மத்திய அரசின் திட்டங்களுக்குத் தங்களின் முத்திரையைப் பதித்து அரசியல் லாபம் அடைவதிலேயே குறியாக இருக்கிறது.

கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 15-ல் பிரதமர் மோடியால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. தமிழகத்தில் 1.25 கோடி வீடுகளுக்குக் குடிநீர் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 1.11 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கு மத்திய அரசு 2021-22-ல் மட்டும் சுமார் ₹3,691 கோடி நிதி வழங்கியது. ஆனால், தமிழகத்தில் இந்தத் திட்டம் "அனைவருக்கும் குடிநீர்" அல்லது உள்ளூர் ஊராட்சித் திட்டங்கள் போலக் காட்டப்படுகிறது. பல இடங்களில் 'ஜல் ஜீவன் மிஷன்' என்ற பெயர் பலகைகளை விட, தமிழக அரசின் சின்னம் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் புகைப்படங்களே பிரதானமாகத் தெரிகின்றன. இதே போல் மத்திய அரசின் திட்டங்களை வைத்து தான் திமுக அரசு  வண்டியை ஒட்டி வருகிறது.