
தமிழக அரசியல் களத்தில் தற்போது அரங்கேறி வரும் நகர்வுகள், ஆளுங்கட்சியான திமுகவின் அமைச்சரவையில் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை மறுக்க முடியாது. குறிப்பாக, பாஜகவின் அஸ்திரங்கள் வெறும் அரசியல் மேடைப் பேச்சுகளாக மட்டும் இல்லாமல்இனி நடவடிக்கையிலும் இருக்கும் என்பதை தான் சொல்லிவிட்டு சென்றுள்ளார் பிரதமர் மோடி. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில்பேசும் மோடி, “தமிழ்நாட்டில் எங்கெங்கு ஊழல் என குழந்தைக்கும் தெரியும். திமுக அரசை மக்கள் குற்றம், மாபியா, ஊழல் அரசு என்று கூறுகின்றனர். திமுக அரசு ஒரே ஒரு குடும்பத்திற்காக மட்டுமே இயங்கி வருகிறது. என்ற பேச்சு தான் அமைச்சர்கலின் பயத்திற்கு காரணம்.
தமிழக அரசியல் களத்தில் பல தசாப்தங்களாக நிலவி வந்த ஒருவிதமான மந்தநிலையை பிரதமர் மோடியின் சமீபத்திய ஆவேசமான உரை அடியோடு மாற்றி அமைத்துள்ளது. இதுவரை பாஜகவை ஒரு ஓரத்தில் வைத்துப் பார்த்து வந்த அரசியல் கட்சிகள் , பிரதமர் மோடி முன்வைத்த அடுக்கடுக்கான விமர்சனங்களாலும் புதிய வியூகங்களாலும் இன்று அதிர்ந்து போயுள்ளது. வழக்கமான அரசியல் கணக்குகளைத் தாண்டி, பிரதமர் மோடி நேரடியாகத் தமிழகத்தின் பண்பாட்டு அடையாளங்களையும், திமுகவின் நிர்வாகத் தோல்விகளையும் இணைத்துப் பேசிய விதம், அறிவாலயத்தின் தேர்தல் உத்திகளைத் தற்காப்பு நிலைக்குத் தள்ளியுள்ளது.
குறிப்பாக, திமுகவை இதுவரை மதரீதியான ஒரு கூட்டணியாக மட்டுமே அடையாளப்படுத்தி வந்த பாஜக, இந்த முறை ‘சி.எம்.எக்ஸ்’ (Corruption, Mafia, Crime) என்ற புதிய அஸ்திரத்தை ஏவியிருப்பது அமைச்சர்கள் மத்தியில் பெரும் பீதியை கிளப்பியுள்ளது.பிரதமர் மோடி தனது உரையில் ஏரிகாத்த ராமர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வீரத்தைப் போற்றியது, தமிழகத்தின் ஆன்மீக மற்றும் தேசியப் பற்றை தட்டியெழுப்பும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இது திமுகவின் திராவிட அரசியல் கட்டமைப்பிற்கு ஒரு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.
மேடைப் பேச்சோடு நின்றுவிடாமல், தமிழகத்தின் இயற்கை வளங்களைச் சுரண்டும் மணல் மாஃபியாக்கள் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்தில் நடக்கும் பல ஆயிரம் கோடி முறைகேடுகள் குறித்து மத்திய புலனாய்வு அமைப்புகள் திரட்டியுள்ள ஆதாரங்கள், அறிவாலயத்தின் தூண்களாக விளங்கும் அமைச்சர்களுக்குத் தூக்கமில்லாத இரவுகளைப் பரிசளித்துள்ளன. மணல் குவாரிகளில் இருந்து ஒரு குறிப்பிட்ட குடும்பத்தின் கஜானாவிற்குப் பணம் மடைமாற்றப்படும் வித்தையை மோடி அம்பலப்படுத்திய விதம், அரசு நிர்வாகத்தையே ஒரு தனியார் நிறுவனம் போலச் செயல்படுத்துவதாக அமைந்திருந்தது.
இதன் விளைவாக, இதுவரை தங்களை யாராலும் தொட முடியாது என்று மார்தட்டி வந்த அமைச்சர்கள் பலரும், இப்போது டெல்லிக்குத் தூதுவர்களை அனுப்பி தங்களைக் காத்துக்கொள்ளத் துடிக்கின்றனர். செந்தில் பாலாஜி தொடங்கி பொன்முடி, எ.வ.வேலு மற்றும் கே.என்.நேரு எனப் பலரது பழைய மற்றும் புதிய ஊழல் கோப்புகள் மிகத் தீவிரமாகத் தூசி தட்டப்படுவது அறிவாலயத்தைச் சுற்றியுள்ள அரசியல் மேகங்களைக் கருமையாக்கியுள்ளது. குறிப்பாக, மணல் கொள்ளை வழக்கில் கணக்கிடப்பட்டுள்ள ₹4,730 கோடி இழப்பு மற்றும் நகராட்சி டெண்டர்களில் கூறப்படும் ₹1,000 கோடி முறைகேடுகள் ஆகியவை திமுகவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் வகையில் அமைந்துள்ளன.
தேசிய அரசின் இந்த அதிரடி ஆட்டம் மற்றும் பிரதமர் மோடியின் நேரடித் தாக்குதல், தேர்தலுக்கு முன்பே திமுகவின் முக்கியப் புள்ளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்திவிடும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. அறிவாலயத்தின் ஒவ்வொரு நகர்வையும் டெல்லி உன்னிப்பாகக் கவனித்து வருவதால், திமுகவின் தேர்தல் வியூகங்கள் அனைத்தும் இப்போது தற்காப்பை நோக்கியே திரும்பியுள்ளன. மோடியின் இந்த விஸ்வரூபம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.
